மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக

மக்களவைத் தேர்தலில் பீஜேபீ கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது; நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 4.23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது பாமகநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 4.23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது பாமக

நாளை வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்

தமிழகத்தில் நாளை வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என சத்யபிரதா சாகு தகவல். 7ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும் எனவும் சாகு தகவல்.

மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக

மக்களவைத் தேர்தலில் பீஜேபீ கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது; நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 4.23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது பாமக

முற்றிலும் பொய்த்துப் போன வாக்கு கணிப்புகள்!

மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் கூறியிருந்த நிலையில், அது பொய்த்துப் போயுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவுக்கு பிறகு, தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் முகமைகளால் வெளியிடப்பட்டன. இக்கணிப்புகளில், ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக […]

விரைவில் மக்களவை தேர்தல் முடிவுகள் முன்னோட்டம் விரைவில்

எந்தெந்த தொகுதிகளில் யார்? ? வெற்றி பெறுகிறார்கள் என்ற தகவல்கள் முன்னோட்டமாக விரைவில் குழுவில் வெளிவர உள்ளது. திமுக கூட்டணி – 20, அதிமுக கூட்டணி -15,பாஜக கூட்டணி -5.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்

இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

5ம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது

49 தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி  5ம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது 49 தொகுதிகளில் ராகுல் காந்தி உள்பட மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டுள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் களத்தில் இருக்கிறார் மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் மீண்டும் களமிறங்கி உள்ளார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்

மக்களவை தேர்தலில் முதல் 2 கட்ட ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் கமிஷன் தாமதம் செய்வது ஏன் என்று எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளன

நாடு முழுவதும் ஏப். 19 மற்றும் ஏப்.26ம் தேதி 2 கட்ட மக்களவை தேர்தல் முடிந்து விட்டது. மே 7ல் 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் முதல் இரண்டு கட்டங்களுக்கான இறுதி ஓட்டுப்பதிவு எண்ணிக்கையை தேர்தல் கமிஷன் இன்னும் வெளியிடவில்லை.இதை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது குறித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான அனைத்து […]

மேற்குவங்க மாநிலம் பஹரம்பூர் தொகுதியில் 4ம் கட்டமான மே 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது

இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றவரும், மக்களவை தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் போட்டியிடுகிறார். மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் நிறுத்தப்பட்டுள்ளார். பாஜ வேட்பாளராக நிர்மல் குமார் சாஹா போட்டியிடுகிறார். அங்கு பேசிய உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத், “இதுவரை 2 கட்டமாக 191 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வடமாநிலங்களில் உத்தரபிரதேசத்தின் 80 தொகுதிகளையும் பாஜவுக்கு பரிசாக தருவோம். […]