5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு

மிசோரம் – நவம்பர் 7சத்தீஸ்கர் – நவம்பர் 7 மற்றும் 17 (2 கட்டமாக)மத்திய பிரதேசம் – நவம்பர் 17ராஜஸ்தான் – நவம்பர் 23தெலங்கானா – நவம்பர் 30 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 3
தனித்து போட்டியாம்?
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களோடு ஆதரவோடு கன்சிராம் மக்கள் கட்சி தனித்துப் போட்டி. -தங்க கலைமாறன், நிறுவனத் தலைவர், கன்சிரான் மக்கள் கட்சி.
நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தோல்வியடைந்தால், திமுக மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவார்கள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். தொகுதி பார்வையாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்-திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்

தஞ்சையில் நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றபின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
மேற்கு வங்கம் மாநிலம் துப்குரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்

பாஜக வேட்பாளர் முன்னிலையில் இருந்த நிலையில், 3வது சுற்று முடிவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார்.
திரிபுரா மாநிலத்தில் 2 சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் 2 இடங்களிலும் பாஜக வெற்றி!

போக்சாநகர் தொகுதியில் தஃபாஜல் ஹொசைன், தான்பூர் தொகுதியில் பிந்து தேப்நாத் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் தேர்தல் கமிட்டி குழு அமைப்பு!

16 பேர் அடங்கிய தேர்தல் கமிட்டி குழு அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் குழு. சோனியா காந்தி, ராகுல்காந்தி, அம்பிகா சோனி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதிரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல்: மநீம தனித்து போட்டியா?

வெளிநாடு பயணத்தை முடித்து நாளை தமிழகம் திரும்பும் கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்த திட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெறலாமா என்பது குறித்து ஆலோசிக்க முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கிய மாநில செயற்குழு
தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி சுமத்தப்படுகிறது.

என் மீதான புகார் குறித்து விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து சீமான் விளக்கம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக இருக்கிறோம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

வாக்காளர் பட்டியலில் இறுதி செய்யும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது தேர்தல் அறிவிப்பை இனி தேர்தல் ஆணையம் தான் மேற்கொள்ள வேண்டும்: மத்திய அரசு.