தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ▪️ 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ▪️ 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு . மற்ற பகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தல் முடிந்த 3-வது நாளில் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

ராஜஸ்தான் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மருத்துவமனையில் இன்று (செவ்வாய்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத்தர்தல் ஆணைய அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் .தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் அதிகாரிகளின் அலட்சியத்தால் வாக்காளர் பட்டியலில் பெண் வாக்காளருக்கு பதிலாக முதல்வர் ஜெகன்மோகன் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் எர்ரகொண்டபாலம் தொகுதிக்கு உட்பட்ட செர்லோபள்ளி கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் முதல்வர் ஜெகன்மோகன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதுவும் குரவம்மா என்ற பெண்ணின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் முதல்வர் ஜெகன்மோகன் புகைப்படம் உள்ளது.இந்த புகைப்படம் தெளிவாக தெரிந்தாலும், ஓட்டுச்சாவடி ஊழியர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர். இந்த படம் இணையத்தில் பரவி வருகிறது. இது அவர்களின் அலட்சிய போக்கையே காட்டுகிறது. மறுபுறம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வரும் தெலுங்கு தேசம் கட்சி […]

தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா அறிவிப்பு தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் அரசு மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க ஒய்.எஸ்.ஷர்மிளா திட்டம்

தெலங்கானாவின் அடுத்த பாஜக முதலமைச்சர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார்

பாரத ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளாலும் தெலங்கானாவில் வளர்ச்சியை கொடுக்க முடியாது. பிரதமர் மோடி தலைமை மட்டுமே வளர்ச்சியை கொடுக்கும்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல்

5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. சத்தீஸ்கர், மிசோராம் மாநிலங்களில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.

5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

மிசோரம் – நவம்பர் 7 சத்தீஸ்கர் – நவம்பர் 7 & நவம்பர் 17 மத்திய பிரதேசம் – நவம்பர் 17 ராஜஸ்தான் – நவம்பர் 23 தெலுங்கானா – நவம்பர் 30 முடிவுகள்: டிசம்பர் 3