வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம்…
இணையதளம் வாயிலாக Enumeration Form-ஐ பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். இதற்கு தேவையான விஷயங்கள். உங்கள் அலைபேசி எண் voter ID யுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதாரில் உள்ள உங்கள் பெயருடன், voter ID உள்ள பெயரும் பொருந்தி இருந்தால், இணையதளம் வாயிலாக சுலபமாக முடித்து விடலாம். தேர்தல் ஆணைய இணையதள முகவரி: https://voters.eci.gov.in/
மேயா், ஆளுநா் தோ்தல்கள்: டிரம்ப்புக்கு பின்னடைவு
அமெரிக்காவின் நியூயாா்க், சின்சினாட்டி நகரங்கள், விா்ஜீனியா, நியூஜொ்சி மாகாணங்களில் முக்கியப் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தோ்தல்களில் எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். இது, அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு அரசியல் ரீதியில் ஏற்பட்டுள்ள முதல் மிகப் பெரிய பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. இதில், நியூயாா்க், சின்சினாட்டி நகர மேயா் தோ்தல்களிலும், விா்ஜீனியா துணை ஆளுநா் தோ்தலிலும் இந்திய வம்சாவளி இஸ்லாமியா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் தமிழகம் பீகாராக மாறும் – சீமான்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியதாவது:- எஸ்ஐஆர் விவகாரத்தில் பாஜக தேவையற்ற வேலையைச் செய்கிறது. மக்களை பதற்றமாகவே வைத்திருக்கப் பார்க்கிறார்கள். அப்போதுதான் செய்கிற தவறு வெளியே தெரியாமல் இருக்கும். ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றால் பெயர்களை நீக்குவோம் என தேர்தல் ஆணையம் இப்போது தெரிவிக்கிறது. இரண்டு மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு என்ன ஆவணங்களை கொடுக்க முடியும்? பிஹார் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க இந்த வேலையைச் செய்கிறார்கள். அப்படி வழங்கும் […]
தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் ஆணையம் முடிவு
தமிழகத்தில் 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பிகாரைப் போன்று நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இந்தப் பணிக்காக, 2002-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையிலான வாக்காளா் பட்டியல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
இவிஎம் எந்திரங்களில் வேட்பாளரின் வண்ண புகைப்படம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்கள் புகைப்படம் வண்ண புகைப்படமாக பயன்படுத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் தேர்தலில் இந்த முறையை அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் திமுகவினருக்கு தங்கம், வெள்ளி நாணயம் பரிசு

மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகள், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினர் 30 பேரில் 9 தங்கம், 21 வெள்ளி நாணயங்களை வழங்கினார். மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் திருமதி.சுப்புலட்சுமி சர்தார் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அவரது மகனும் மாநகர துணை அமைப்பாளர் ச.ராஜேஷ் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்சி நடைபெற்று, சிறப்பு அழைப்பாளராக […]
இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2ம் வாக்கு எண்ணிக்கை

முதல் வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை பெறவில்லை. இதனால், வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் இரண்டாவது விருப்பமாக தேர்வு செய்த எண்ணிக்கை நடக்க உள்ளது. முதல் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த அநுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கு விழுந்த வாக்குகள் மட்டுமே 2வது எண்ணிக்கையில் கணக்கில் எடுக்கப்படும். இறுதி எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு

7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தலால் பெரும் எதிர்ப்பார்ப்பு..
“ஒரே தேர்தல் – ஆதரவு தாருங்கள்”

“தொடர் தேர்தல்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடை கற்களாக அமைகிறது” “மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது” “எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தாலும் அது தேர்தலோடு தொடர்பு படுத்தப்படுகிறது” “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கை அடைய தேசம் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்” பிரதமர் மோடி வேண்டுகோள்
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு
1ஆம் கட்டத்தேர்தல்டிசம்பர்-27 2ஆம் கட்டத்தேர்தல்டிசம்பர்-30 வாக்கு எண்ணிக்கை ஜனவரி-2