தமிழகத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாதிரி பள்ளி
தமிழகத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் புதிய மாதிரி வெற்றிப் பள்ளிகள் அமைக்கப்படும். உண்டு உறைவிட பள்ளி உருவாக்கப்படும். கல்வி தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை என்ற நிலையை உருவாக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்
10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 16ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறுவாய்ப்பு உடனடியாக வழங்கும் வகையில் துணைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதற்கு இன்று மே 22ஆம் தேதி வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு – 93.80 சதவீதம் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள்.இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு இன்று வெளியாகின. அதன்படி தேர்ச்சி விகிதம் […]
11-ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ – மாணவியர் தேர்ச்சி
11-ம் வகுப்பில் மொத்தம், 92.09 சதவீதம் மாணவ – மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 95.13 சதவீதமும், மாணவர்கள் 88.70 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவியர் 6.43 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியீடு.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 16) வெளியிடப்படும். மே 16 காலை 10ஆம் வகுப்பு முடிவும், பிற்பகலில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியீடு-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.66% பேர் தேர்ச்சி
சிபிஎஸ்சி பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின இதில் முதலிடம்: திருவனந்தபுரம் 99.79%2ஆம் இடம்: விஜயவாடா 99.79%3ஆம் இடம்: பெங்களூரு 98.90%4ஆம் இடம்: சென்னை 98.71% தேரச்சி விகிதம்: பெண்கள் 95% ஆண்கள் 92.63%தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் மூன்றாவது இடத்தை அகில இந்திய அளவில் பெற்றுள்ளார்
முன்கூட்டியே வெளியாகிறது ‘பிளஸ் 2’ பொதுத்தேர்வு முடிவுகள்
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பிலேயே பெயில்
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ‘பெயில்’ (தேர்ச்சி இல்லை) என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால் இந்த முறை அடுத்த ஆண்டில் இருந்துதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன. […]
இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆக்ஸ்ஃபோர்டு கல்வி மையம் வழங்குகிறது

சென்னை: இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி சேவைகள் மையம் (ஓஐஇஎஸ்) சார்பில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மோஹித் கம்பீர், தலைமை வணிக அதிகாரி ஆண்டி கால்டுவெல், […]
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான சேவை இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – அரசு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரான சுகாதாரத்துறையின் அரசாணை எண் 151ஐ உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் உள்ளிட்ட ஒருசில முதுநிலை படிப்புகளைத் தவிர, பிறதுறைகளில் அரசு மருத்துவர்கள் பட்ட மேற்படிப்புகளை பயில்வதற்கான சேவை இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு மருத்துவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து பயில தடைவிதிக்கும் திமுக அரசின் இந்த பிற்போக்குத்தனமான நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய […]