மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன்

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பூத உடலுக்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். மேலும் எம் எஸ் சுவாமிநாதன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

வாரிசு அரசியல் செய்யும் காலம் விரைவில் முடிவு கட்டப்படும்- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.மக்களை திசை திருப்புவதற்கான நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார்.பட்டியலின மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்தவர்கள் தான் இன்று சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார்கள்.ஊழலை மறைப்பதற்கும் விலைவாசி உயர்வை மறைப்பதற்கும் இன்றைக்கு இந்த நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி இருக்கிறது.

”எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை.. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்”

கோடநாடு பங்களாவில் இருந்து எனது தம்பி கனகராஜ் 5 பெரிய பைகளை எடுத்து வந்தார்; அதன் உள்ளே ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன. எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில் எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார். கனகராஜ் உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் பரபரப்பு பேட்டி. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை.

ஈபிஎஸ் என்ன புரட்சி செய்தார்?

புரட்சி என்றால் அது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மட்டும் தான் எனவும் ஓபிஎஸ் ஆதரவு மனோஜ் பாண்டியன் பேச்சு புரட்சி தமிழர் பட்டம் வழங்கும் அளவுக்கு ஈபிஎஸ் என்ன புரட்சி செய்தார்?

திமுகவை போல் பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்தவன் இல்லை

இந்த பழனிச்சாமி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு சிறப்பாக ஆட்சி செய்தேன். நீட் தேர்வை முதல் கையெழுத்தில் ரத்து செய்வேன் என்று சொல்லி இன்று உண்ணாவிரதம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்கள்.வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பொய்களால் தமிழக மாணவர்களை இழந்து வருகிறோம். 2010இல் திமுக காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சதீவை தாரை வார்த்த […]

புரட்சித் தமிழர் பட்டம் கொடுத்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி: எடப்பாடி பழனிசாமி

மதுரை: புரட்சித் தமிழர் பட்டம் கொடுத்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி என எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். 31 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த பெரிய கட்சி அதிமுகதான் மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழகம் மதுரையில் ஆகஸ்ட் 20ல் அதிமுக மாநாடு; எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள்: அதிமுகவினர் கலக்கம்

மதுரை: மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு அதிமுகவின் மிக முக்கியமான மாநாடாக கருதப்படுகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு மிகபெரிய மாநாட்டை எடப்பாடி தரப்பினர் நடத்த உள்ளனர். இந்த மாநாட்டிற்கு ஆரம்பத்திலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. தென்மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகத்தினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு போஸ்டர்களை […]

மதுரையில் சசிகலா ஆதரவாளர்கள் எடப்பாடி ஆதரவாளர் போஸ்டர் யுத்தம்

மதுரையில் அதிமுக மாநாடு நடத்துவதற்க்காக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் ஆர் பி உதயகுமார் ராஜன் செல்லப்பா செல்லூர் ராஜூ ஆகியோர் மாநாடு வேலைகளை நடத்தி வருகின்றனர். இதற்க்காக மதுரையில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர்கள் ஒட்டி தனது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் வி.கே சசிகலா பிறந்த நாள் வருவதை ஒட்டி சசிகலாவின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இதில் ஹய்லைட்டான விசயம் என்னவென்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நாம் இருவரும் ஒரே […]