அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடிக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கே.சி.பழனிசாமி முறையீடு செய்திருந்தார். பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டுவிட்டார் – இ.பி.எஸ். தரப்பு பதில்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் நவம்பர் 21ம் தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!

பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்த சென்றபோது அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா கடந்த 28ம் தேதி தொடங்கியது. இன்று தேவர் குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் சென்றார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். எடப்பாடி மரியாதை செலுத்தும் போதே அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது. எடப்பாடி ஒழிக.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது. தேவர் நினைவிடத்தில் அஞ்சலி […]

சட்டமன்றத்தில் தேவர் படத்தை வைத்தது அதிமுக அரசுதான். சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், மரியாதை செலுத்திய பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் திருமகனார் நினைவிடத்தில் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்

பசும் பொன் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும்திரளாக சாலைகளின் கூடி நின்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதவியில் நீடிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கோ வாரண்டோ வழக்கு

விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் எந்த தகுதி அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு கோ வாரண்டோ வழக்கு தொடரலாமா – உயர்நீதிமன்றம் கேள்வி முன்னுதாரணமான தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் தரப்பு பதில் அளிக்க அவகாசம் வேட்புமனுவில் தவறான தகவல் அளிப்பதை தகுயிழப்பாக கருத முடியாது தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் – அரசு தரப்பு விளக்கம்

தமிழக சட்டமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்

ஓபிஎஸ் , வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் அவர்களின் எம்எல்ஏ தகுதி நீக்கம் தொடர்பாக முடிவு செய்ய கூட்டம்

பாஜகவுடன் கூட்டணி முறிவில் அதிமுக உறுதி: இபிஎஸ் பேட்டி

பாஜகவுடன் கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2 கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு இனங்க கூட்டணி முறிவு. 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறினார்.