“காரில் வரும்போது கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தேன்” எடப்பாடி
முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது?” முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை கடிதத்தை அமித்ஷாவிடம் கொடுத்தேன்.. அதிமுக உள் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அமித்ஷா கூறினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்
அமித்ஷாவிடம் பேசியது என்ன? எடப்பாடி விளக்கம்
கடந்த வாரம், செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோரும் உடன் சென்றார். பின்னர் அமித் ஷாவும், பழனிசாமியும் தனியே கலந்துரையாடினர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு […]
2026-ல் எடப்பாடி தோற்பது உறுதி – தினகரன் பேட்டி
டிடிவி தினகரன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்எல்ஏக்கள் தானே தவிர பாஜக அல்ல. சசிகலா கூறியதால்தான் 122 பேரும் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியவர்தான் இபிஎஸ் .அவருக்கு நன்றி என்பதே கிடையாது அவர் 2026 தேர்தலில் தோற்பது உறுதி என்று- டிடிவி தினகரன். கூறினார்
திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் – எடப்பாடி புகார்
திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கம்பெனிக்கு மூடுவிழா நடத்தப்படும் என தாராபுரம் தொகுதியில் நடந்த கூட்டத்தில் பேசினார்
எடப்பாடி தான் பிரச்சனை – தினகரன் பேட்டி
இபிஎஸ் தலைமையில் என்றைக்கும் இணைய மாட்டோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறினார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் தங்களுக்கு பிரச்சனை இல்லை என கூறினார்.
எடப்பாடிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே எடப்பாடி மீதான அதிருப்தியில் இருந்து வந்தார் அவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் அதிமுகவில் இருந்து விலகியவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் சேர விரும்புவதாக கூறினார் அவர்களை மீண்டும் கட்சியை சேர்த்தால் தான் அதிமுக வெற்றி பெற முடியும் இல்லாவிட்டால் எங்களை போன்றவர்கள் எல்லாரும் சேர்ந்து செயல்படுவோம் என்று செங்கோட்டையன் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.இதற்கு அவர் பத்து நாள் கெடு விதித்தார்
துப்புரவு பணியாளர்கள் நள்ளிரவில் கைது. எடப்பாடி கண்டனம்
சென்னை மாநகராட்சி முன்பு தொடர் போராட்டம் நடத்தி வந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர் அவர்கள் பல்வேறு இடங்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ததை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்துள்ளார் நள்ளிரவில் கைது செய்ய அவர்கள் தீவிரவாதிகள் என்று அவர் கேட்டுள்ளார் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த பிரச்சனை தொடர்பாக போராட்டத்தை அறிவித்துள்ளது
எடப்பாடி சந்திப்பை நயினார் நாகேந்திரன் தவிர்த்தாரா?
திருவாரூர், நாகை மாவட்டங்களில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு திருத்துறைப்பூண்டியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, திருவாரூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று ஓய்வெடுத்தார்.இந்த சூழலில் நாகையில் பாஜக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, திருவாரூர் வழியாக சென்ற நயினார் நாகேந்திரனுக்கு பாஜகவினர், திருவாரூரில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, நயினார் நாகேந்திரன், பழனிசாமியை சந்திப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரை சந்திக்காமல் சென்றதால், இரு கட்சியின் தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜர்

அறப்போர் இயக்கத்திற்கு எதிரான அவதூறு வழக்கில் டிசம்பர் 11ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு
எடப்பாடி நண்பர் நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்களின் படி சென்னையில் பிஎஸ்கே நிறுவனத்தில் ஐடி ரெய்டு: பல கோடி பணப்பரிமாற்ற ஆவணங்கள் சிக்கின
சென்னை: எடப்பாடியின் நண்பரான இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான சென்னையில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் பல கோடி பணப்பரிமாற்ற ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பிஎஸ்கே குழுமம் இயங்கி வருகிறது. இது, அதிமுக ஆதரவாளரான தொழிலதிபர் பெரியசாமிக்கு சொந்தமான நிறுவனம். தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை முக்கிய ஒப்பந்ததாரராக இந்த குழுமம் உள்ளது. அதேநேரம் அதிமுக ஆட்சியின் […]