கூட்டணிக்கு வரும் புதிய கட்சி -எடப்பாடி தகவல்
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, அன்புமணி பா.ம.க ஆகியோர் இணைந்துள்ளனர் தற்போது மேலூம் ஒரு கட்சி ஓரிருநாளில் கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி அறிவித்துள்ளார்
மக்களை சுரண்டும் திமுக ஆட்சி – எடப்பாடி
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: லஞ்சம் வாங்குவது, கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது, மக்களை சுரண்டுவதில் திமுக ஆட்சி சிறந்தது… நாட்டு மக்களுக்கு திட்டங்கள் போடுவதில், மக்கள் நலன் பெறுவதில் அதிமுகவின் ஆட்சி சிறந்தது… சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை; ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களுக்கே பாதுகாப்பு இல்லை… ஒரு மாநிலம் வளமாக இருக்க வேண்டும் என்றால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற பேச்சுவார்த்தை – எடப்பாடி பழனிசாமி பேட்டி
நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய மந்திரி பியூஷ்கோயலை சந்தித்து பேசினோம். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசித்தோம். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம்- எடப்பாடி பழனிசாமி பேட்டி திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். சட்டசபை […]
அதிமுக 170 தொகுதிகளில் போட்டி..???
தேசிய ஜனநாயக கூட்டணியில் 170 இடங்களில் போட்டியிடும் வகையில் அதிமுக வியூகம் வகுத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் பாமக, தேமுதிகவுடன்d பேச்சுவார்த்தை நடத்தும் பணியை அதிமுக மேற்கொள்ளும் எனவும், டிடிவி தினகரன், OPSடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் இணைக்கும் பணியை பாஜக மேற்கொள்ளும் என தகவல்
கூட்டணி விரிவாக்கம்? பியூஷ் கோயல் – இபிஎஸ் சந்திப்பு!
திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. பாஜக மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை இணைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக பொறுப்பாளர் பியுஷ் கோயல் எடப்பாடி உடன் சந்திப்பு
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார் .அவர் நாளை சென்னை வருகிறார். அப்போது அவரை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் சந்தித்து பேச இருக்கிறார்கள். அவர் முன்னதாக கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் கிண்டி ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுகிறார் அப்போது தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்கிறார்கள்
125 நாள் வேலை திட்டம் – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்துவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பது மன்னிக்க முடியாத பச்சை துரோகம் என்று மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி!
எடப்பாடிக்கு கோவணம் கூடமிஞ்சாது நாஞ்சில் சம்பத் தாக்கு
செங்கோட்டையன் த.வெ.க வில் இணைவது குறித்து மூத்த அரசியல் விமர்சகரும் அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் தனது கடுமையான கருத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “கோட்டைக்குப் போக வேண்டும் என்று திட்டமிட்டு மூத்தவர்களையும் காத்தவர்களையும் கட்சியைவிட்டு வெளியேற்றிய எடப்பாடிக்கு, போகிற போக்கை பார்த்தால் கோவணம் கூட மிஞ்சாது போல் தெரிகிறது.” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
எடப்பாடி மீது செங்கோட்டையன் சரமாரி குற்றச்சாட்டு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்புப் பேட்டி அளித்திருக்கிறார். ‘’எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு பரிந்துரை கடிதத்தை கொடுத்தவன் நான். கொடநாடு கொலை வழக்கில், A1-ல் இருக்கிறார் இபிஎஸ். பழனிசாமி எடுத்த முடிவுகளால் அதிமுக தொடந்து தோல்வியைத் தழுவியது. எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம்’’ என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.
ஓபிஎஸ் தினகரனை கூட்டணியில் சேர்க்கவும் எடப்பாடி எதிர்ப்பு
மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது.சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை அதிமுக கூட்டணியில் கூட சேர்க்க முடியாது” என்று பழனிசாமி பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், “அப்படி எனில், தென் மாவட்டங்களில் அவர்களுக்கு உள்ள வாக்கு வங்கி நமக்கு கிடைக்காமல் போகும். இது திமுக வெற்றிக்கு சாதகமாக அமைந்துவிடுமே. திமுக ஆட்சியை அகற்றும் நோக்கத்துக்கு இந்த முடிவு இடையூறாக இருக்காதா” என்று அமித் ஷா கேட்டுள்ளார். அதற்கு, “அவர்களிடம் சொல்லிக்கொள்ளும்படியாக வாக்கு வங்கி இல்லை.என்று எடப்பாடி […]