கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – சமூக அமைப்புகளின் கருத்துக்களை கேட்காமல் அரசே தன்னிச்சையாக முடிவெடுப்பது சட்டவிரோதமாகும்.

கள்ளர் சமுதாயத்தினர் கல்வியறிவு பெறவும், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2023-24 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், இடம்பெற்றிருந்த கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கள்ளர் […]

அதிக லாபம் கொடுக்கும் பங்குகள்: ஷீத்தல் மல்பானி

பிரபல முதலீட்டு நிறுவனமான தமோஹாராவின் தலைமை அதிகாரி ஷீத்தல் மல்பானி, லார்ஜ் கேப் ஃபண்டுகளைவிட, மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளே அதிக லாபம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், “கடந்த காலாண்டில், நிதி, நுகர்வோர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளை சேர்ந்த சில நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கே அதிக லாபம் கிடைத்திருக்கிறது” என கூறியுள்ளார்.