EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி போலியானது

பதட்டம் அடைய வேண்டாம் ✦ உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும் ✦ அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம் ✦ இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம் ✦ உடனடியாக 1930-ஐ அழைத்து புகார் அளிக்கவும் ✦ உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழக மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு அரசு வழங்கும் மானியத்தை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஒரு மின் இணைப்பிற்கு ஒரு ஆதார் எண்ணை மட்டுமே இணைக்க முடியும் என்றும், வாடகை […]
மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கும் வகையில், கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் செய்து வழங்கும் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, தமிழ்நாடு முழு வதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென `சிறப்புப் பெயர் மாற்றம் முகாம்’, கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கி ஒரு மாதகாலம் வரை மின்வாரியத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற்று வந்தது. இந்த முகாம் […]