பல்லாவரம் தொகுதியில் 22 புதிய மின்மாற்றிகள்

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி ஒரு கோடியே 16 லட்சத்தில் 22 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி திறந்துவைத்தார் பல்லாவரம் தொகுதியில் பல்வேறு இடங்களில் குறைந்த மின் அழுத்த ஏற்படுவதாக எழுந்த புகாரின் பேரில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தொகுதி நிதி ஒரு கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, பம்மல் மற்றும் பொழிச்சலூர் ஊராட்சி என 22 இடங்களில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது, இதனை சட்டமன்ற உறுப்பினர் […]
100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி – மின் வாரியம் விளக்கம்

வீட்டு உரிமையாளருக்கு 1க்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் 100 யூனிட் மட்டும் மானியம். வீட்டின் உரிமையாளருக்கு மற்றொரு இணைப்பிற்கு மானியம் ரத்து. வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும். அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் ரத்து என்பது தவறானது.
சித்தாலப்பாக்கத்தில் மின்வாரிய அதிகாரி விபத்தில் உயிரிழப்பு

மடிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின்வாரிய உதவி இயக்குனர் பலி சென்னையை அடுத்த மடிப்பாக்கம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் கோபால் இவரது மகன் செந்தில்குமார்(46). இவர் சித்தாலப்பாக்கம் மின்சார வாரிய உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இன்று இரவு மேடவாக்கம்-பரங்கிமலை சாலையில் இருந்து மடிப்பாக்கம் சபரி சாலை வழியாக வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில்(TN 32 L 8427 HONDA SHINE ) சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது பின்புறம் […]
தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்ச மின்சார நுகர்வு: மின்சார வாரியம்

தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 430.13 மில்லியன் அலகுகளாக நேற்று பதிவு செய்யப்பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. முந்தைய உச்சபட்ச நுகர்வு மார்ச் 29-ம் தேதி 426,44 மில்லியன் அலகுகளாக இருந்தது. மின் விநியோகத்தை தொடர்ந்து சீராக வழங்கி வருகிறோம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்தது.
“மின் கம்பங்கள் எல்லாம் தண்ணீல விழுந்ததால கொஞ்சம் சவாலா இருக்கு, ஆனா கூடிய சீக்கிரம் கரண்ட் தந்துடுவோம்”

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பெருமழையில் சேதமான மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நம்பிக்கை
வண்டலூரில் மின்கம்பம் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

வண்டலூர் அருகே கண்டிகை கிரபாக்கம் சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி மின்கம்பம் உடைந்து சாலையில் சாய்ததால் பரபரப்பு இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிப்பு, மின்கம்பத்தை சீர் செய்யும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மின் கட்டணம் செலுத்த சிறு குறு தொழிற்சாலைகளுக்கு அவகாசம்

புயல் பாதிப்பு காரணமாக சிறு குறு தொழிற்சாலைகள் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடுகளுக்கும் இந்த அவகாசம் தரப்பட்டுள்ளது. 18ந் தேதி வரை கட்ட அபராதம் கிடையாது.
மழை பாதித்த சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மொத்தம் 8,596 மின்வாரிய பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்
8 மாவட்டங்களில் மருத்துவப் பணியில் 4,320 மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 236 நிவாரண மையங்களில் உள்ள 9,634 பேருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட தேவையானவை வழங்கப்பட்டு வருகின்றன. மீட்புப்பணிக்கு அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றி வரும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக அரசாணை வெளியீடு

மின் கட்டண குறைப்பு இன்று அமலுக்கு வரும் நிலையில், தமிழக அரசு அரசாணை வெளியீடு. அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படுகிறது.
மின் இணைப்பு பெற 50,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது!

மின் இணைப்புக் கொடுக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், ராசாம்பாளையம், தென்றல் நகரைச் சோ்ந்தவா் சண்முசுந்தரம் (53), விசைத்தறி உரிமையாளா். இவருக்கு சொந்தமான கிடங்கு ராசாம்பாளையம் சாலை எஸ்எஸ்பி நகரில் உள்ளது. அந்தக் கிடங்கில் ஏற்கெனவே இருந்த 10 ஹெச்.பி.க்கான மின் திறனை 80 ஹெச்.பி.க்கு உயா்த்தித் தர வேண்டும் என ஈரோடு திருநகா் காலனியில் உள்ள மின்வாரிய உதவி […]