ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவு

ஏற்கனவே நிலநடுக்கத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு தற்போது மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி
ஆப்கன் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000-ஐ கடந்தது

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 4,000-ஆக உயர்துள்ளது என அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹெராத் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
இரவில் திடீர் நிலநடுக்கம்! – குலுங்கிய கலவர பூமி

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. உக்ருள் நகரில் இருந்து 66 கிலோ மீட்டர் தென் கிழக்கில், 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாகவும், நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று, அந்தமான் அருகே கடற் பகுதியில் 93 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 4.4 அலகுகளாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மொராக்கோ நாட்டில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: மொராக்கோ நாட்டில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இக்கட்டான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 15 மாவட்டங்களில் நிலநடுக்க அபாயம்!

சென்னை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட, 15 மாவட்டங்களை, மிதமான நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகளாக, மத்திய அரசு வரையறுத்துள்ளது. இப்பகுதிகளில், ‘கான்கிரீட்’ கட்டுமான பணிகளில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என, இந்திய தர நிர்ணய அமைப்பு பரிந்துரைத்து உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் பாதிப்புகள் தான் பிரதானமாக உள்ளன. 2004ல் சுனாமி ஏற்பட்ட பின், நிலநடுக்கம் தொடர்பான விஷயங்களில், கட்டுமான துறையினர் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். நாட்டில், இமயமலையை ஒட்டிய […]
இமாச்சலப்பிரதேச மாநிலம் குலு மணாலியில் நிலச்சரிவு

இமாச்சலப்பிரதேச மாநிலம் குலு மணாலியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குலு மணாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.
கொலம்பியா

ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் பெண் ஒருவர் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
சீனாவில் பயங்கர நிலச்சரிவு: 4 பேர் பலி

சீனாவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிர்ழந்தனர். மேலும் 16 பேர் மாயமானதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள ஹொக்கைடோ என்ற இடத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைத்துளள்னர். நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6 ஆகப் பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.