நாளை முதல் வானில் 2 நிலா

பூமிக்கு அருகே 14 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் வரும் சிறிய விண்கல் சூரிய ஒளிப்பட்டு, பூமியை நோக்கி திரும்பும் என்பதால், நாளை முதல் வானில் 2 நிலவு தோன்றும் என விஞ்ஞானிகள் தகவல்
பூமியை நாளை நெருங்கும் 2 எறிகற்கள்

பூமியை நாளை 2 எறிகற்கள் நெருங்குவதாக நாசா எச்சரித்துள்ளது. அவற்றுக்கு 2020 GE , 2024 RO11 என்று நாசா பெயரிட்டு உள்ளது. இதில் 2020 GE எறிகல், பேருந்து சைஸ் உடையது. இது பூமியை 4.10 லட்சம் மைல் தொலைவில் கடக்கும். 2024 RO11 எறிகல், விமானம் அளவுக்கு பெரியது. அது 45.80 லட்சம் மைல் தொலைவில் கடக்கும். இந்த 2 எறிகற்களால் பூமிக்கு பாதிப்பு இருக்காது என்று நாசா தெரிவித்துள்ளது.
பூமிக்கு மிக அருகில் ஒரு விண்கல்.! இஸ்ரோ எச்சரிக்கை.!

பூமிக்கு மிக அருகில் விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது. அப்போபிஸ் என்ற இந்த விண்கல் 13 ஏப்ரல் 2029 பூமியை தாக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி மைதானம் அளவிற்கு பெரியதாகவும், ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் போன்ற தோற்றத்தையும் கொண்டுள்ளது. தற்போது இந்த விண்கல் பூமியிலிருந்து 32,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது போன்ற மிகப்பெரிய விண்கல் இதுவரை பூமிக்கு அருகில் வந்ததில்லை என கூறப்படுகிறது.
சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டார்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டார். சுனிதாவும் பர்ச் வில்மரும் ஒரு வாரத்திற்கு சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கிய பின்னர் வரும் 14ஆம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளனர். பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், விண்வெளி பயணத்தை மேற்கொள்ளும் வகையில் ஸ்டார் லைனர் என்கிற திட்டத்தின் அடிப்படையில் புதிய விண்கலத்தை வடிவமைத்துள்ளது.
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிப்பு..!!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.பெங்களூரு, கடந்த 2-ம் தேதி 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி, 1,480 கிலோ எடை கொண்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ‘ஆதித்யா எல்1’ விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்றது. பின்னர் புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை விண்கலம் […]
சந்திரயான்-3 எடுத்ததாக போலி படங்கள்

புதுடில்லி: நிலவில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், நிலவில் தரையிறங்கி பிறகு அங்கிருந்து பூமியை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் ‘செயற்கை நுண்ணறிவு’ படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள் வைரலாகின. நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது 5வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பூமியில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு மாற்றப்பட இருக்கிறது. […]