அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
சளி பிரச்சினை காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி பரிசோதனைக்கு பிறகு இன்று அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்புவார் என தகவல்
ஆந்திராவில் பாலாற்றில் தடுப்பணை கட்டினால் தடுப்போம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விக்ரவாண்டி செய்தியாளருக்கு பேட்டி:

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு எப்படி அணைக்கட்டும் என பார்ப்போம் அமைச்சர் துரைமுருகன். பாமகவுக்கு வன்முறையில் ஈடுபட தான் தெரியும் அதுதான் அவர்களது வேலை துரைமுருகன்.. பேட்டி:
ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவிப்பு

ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நீர் மேலாண்மையில் புதுமை மற்றும் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கும் வகையில் தமிழ் நாடு அரசின் நீர்வளத்துறைக்கு அணை பாதுகாப்பில் நிறுவனங்களை வலுப்படுத்தும் முயற்சிக்கான சிறந்த விருதான “வாட்டர் டைஜஸ்ட் உலக நீர் விருதினை” நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காண்பித்து வாழ்த்துபெற்றார்

உடன் காவிரி தொழில் நுட்பக் குழும தலைவர் ஆர்.சுப்பிரமணியன், இயக்கம் பராமரிப்பு மற்றும் மாநில அணை பாதுகாப்பு நிறுவன தலைமைப் பொறியாளர் ந.சுரேஷ், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் கு.அசோகன், சிறப்பு தலைமைப் பொறியாளர் இரா.இராணி, செயற்பொறியாளர் வ.வீரலட்சுமி ஆகியோர் உள்ளனர்.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்திமுகவிலிருந்து நீக்கம்பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த 51- வது வார்டு சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் நிரஞ்சனா ஜெகதீசன் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பில் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும்

ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை வழங்காததால் 6.357 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன், கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம் – அமைச்சர் துரைமுருகன்.