விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் இரு நாட்களுக்கு முன்பு, போராட்டத்தில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் தலை மறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தில் தவிக்கும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள்?

தமிழக காவல்துறையில் குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்களால் இடமாறுதல், விடுமுறை கேட்டு விண்ணப்பித்தும் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் ஒரு தற்கொலை நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், வாரம் ஒரு நாள் போலீசாருக்கு ஓய்வு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது. திருவிழா, வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு சமயங்களில் சூழ்நிலை பொறுத்து ஓய்வு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை மட்டும் ‘வேத வாக்காக’ எடுத்துக்கொண்டு போலீசாருக்கு […]