நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரை

ஸ்திரமான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். மக்களின் இந்த முடிவு இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான நம்பிக்கை. உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது; விரைவில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகும். விவசாயம், தொழில்துறை, சேவைத்துறை ஆகியவற்றுக்கு சமமான முக்கியத்துவம் தரப்படுகிறது. சிறிய நகரங்களுக்கு கூட விமான போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது-குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை. இந்த முறை தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் […]

தேசிய விளையாட்டு விருதுகள்

முகமது ஷமிக்கு (கிரிக்கெட்) 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த செயல்பாட்டிற்காக அர்ஜுனா விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.

17 நாட்கள் போராட்டத்துக்குப் பின் 41 தொழிலாளர்களை மீட்ட மீட்புக் குழுவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு

உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்ட்ட அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து “மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது” “நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்கிறார்கள்” – பிரதமர் மோடி

நேரு பெயர் நீக்கம் – மத்திய அரசின் முடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வாழ்ந்த அரசு பங்களா, அவரின் மரணத்திற்குப் பிறகு, 1964 ஆம் ஆண்டில் “நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்” (NMML) என்ற பெயரில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அதில் உள்ள நேரு பெயரை நீக்கி, “பிரதமர் அருங்காட்சியகம்” என மறுபெயரிட மத்திய பாஜக அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னையில் ஜனாதிபதி

தமிழ்நாட்டில்‌ பல்வேறு நிகழ்ச்சிகளில்‌ கலந்து கொள்வதற்காக சென்னை வருகை தந்த இந்தியக்‌ குடியரசுத்‌ தலைவர்‌ திரௌபதி முர்மு நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌ பொன்னாடையும்‌, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின்‌ மூலம்‌ ஒடியா மொழியில்‌ மொழியாக்கம்‌ செய்யப்பட்ட திருக்குறள்‌ புத்தகத்தையும்‌ வழங்கி வரவேற்றார்‌. உடன்‌ தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி, சட்டமன்றப்‌ பேரவைத்‌ தலைவர்‌ மு.அப்பாவு, அமைச்சர்கள்,‌ மற்றும் பலர் வரவேற்றனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, கர்நாடக மாநிலம் மைசூரு வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் முதுமலை அடுத்த மசினகுடியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து, தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு காரில் செல்கிறார். அங்கு, பழங்குடியின மக்கள் மற்றும் ‘தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளியை சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார். மீண்டும் காரில் மசினகுடி […]