அனுபவமில்லாதவர்களை வைத்து, டிராக்டர் மற்றும் ஆட்டோ டிரைவர்களை பயன்படுத்தி அரசு பேருந்துகளை ஓட்டி மக்களின் உயிரோடு அரசு விளையாடுவதாக கடலூர், கன்னியாகுமரியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்

திருச்சியில் ஓடும் பஸ்சில் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் பரிதாபமாக உயிரிழப்பு

இதனால் தாறுமாறாக ஓடிய பேருந்து டெலிபோன் கம்பத்தில் மோதி நின்றது இதில் அதிர்ஷ்டவசமாக 18 பயணிகள் உயிர் தப்பினர்.

கேரள அரசு பஸ்களில் டிரைவர்களுக்கு சீட் பெல்ட்

திருவனந்தபுரம்: கார்கள் உள்பட இலகு ரக வாகனங்களில் டிரைவர்கள் மற்றும் முன் இருக்கையில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே சீட் பெல்ட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ்கள், லாரிகள் உள்பட கனரக வாகனங்களுக்கும் சீட் பெல்ட்டை கட்டாயமாக்க சமீபத்தில் தீர்மானிக்கப்பட்டது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இதையடுத்து கேரளாவில் அரசு பஸ்களில் டிரைவர்கள் மற்றும் கேபின்களில் இருப்பவர்களுக்கு சீட் பெல்ட் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் இதற்கான பணிகள் தொடங்கும் என […]

பேருந்தை மாணவிகள் தள்ளிய விவகாரம் – 4 பேர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை கல்லூரி மாணவிகள் தள்ளிய விவகாரம் தொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம், பழுதாகி நின்ற அரசு பேருந்தை மாணவிகள் வைத்து தள்ளி சென்ற விவகாரம் வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை

விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 ஓட்டுநர் – நடத்துநர் பணி: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர்-நடத்துநர் பணியிடங்களுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு 2013-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பல ஆண்டுகளாக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து […]

500 தற்காலிக ஓட்டுநர்களை நியமிக்க அரசு திட்டம்

கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டத்தால், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஓட்டுநர்கள் நியமிக்காத நிலையில், ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் போக்குவரத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் ஏஜென்சிகள் மூலம், 500 தற்காலிக ஓட்டுநர்களை நியமிக்க கேஎஸ்ஆர்டிசி திட்டமிட்டுள்ளது.