தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது?: ஐகோர்ட் கிளை கேள்வி

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. நெல்லை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றை முறையாக பராமரிக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு ஆணையிட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழை காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரும் பணியினை தொடங்குவதற்கு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் கோரிக்கை விடுத்தார்

இதையொட்டி மண்டலம் 3 சிட்லபாக்கம் 43வது வார்டில் மழைநீர் வடிகால்வாய்களை ஒப்பந்ததாரரின் மூலம் தூர் அகற்றும் பணி துவங்கி வைக்கப்பட்டது. அப்போது தி.மு.கழக நிர்வாகிகள் ப.இலக்ஷ்மணன், பார்தசாரதி, அருள் மற்றும் ஜெரி உடன் இருந்தனர்.
செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட திருமலை நகர் 39 வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நரேந்திர குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர் ரகுபதி ஜெயபிரவீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் இணைப்பு சாலையில் ஏற்பட்டுள்ள கால்வாய் பணிகளை பருவமழைக்கு முன்னதாக நேரத்தில் முடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாதாள சாக்கடையில் சிக்கிய எரிவாயு லாரி பம்மலில் போக்குவரத்து பாதிப்பு

பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை பம்மலில் எரிவாயு ஏற்றிசென்ற லாரி பாதளசாக்கடை தோண்டப்பட்டு சரியாக மூடாதசாலையில் சிக்கி சாய்ததால் போக்குவரத்து பாதிப்பு, கிரேன், ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்டு வருகிறார்கள். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை உள்ளது நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை ஏற்கனவே குறுகலாகவும் வளைவு, நெளிவுகள் அதிகமான சாலை, இதற்காக விரிவாக திட்டமிட்ட அதன்பணிகளும் நடைபெறாமல் உள்ளது.இந்த நிலையில் […]
தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு, திரு.வி.க நகர் மெயின் ரோடு மற்றும் திரு.வி.க. நகர் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது

இதனை அறிந்து 38 வது மாமன்ற உறுப்பினர் திருமதி சரண்யா மதுரைவீரன் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு பாதாள சாக்கடையில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டு மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது. அருகில் சி.ஆர்.மதுரைவீரன்
சிட்லபாக்கத்தில் மழைநீர் சேகரிப்புகுழி தூர்வாரும் பணி

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சிட்லபாக்கம் சி.ஜெகன் மற்றும் பரிமளா சிட்டிபாபு ஆகியோரால் அமைக்கப்பட்டுள்ள 12 மழை நீர் சேகரிப்பு குழிகளும் பருவமழைக்கு முன்பே தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. குரோம்பேட்டை ராஜ்பாரிஸ் நகர் -2, திருக்குறள் தெரு 1, உ.வே சுவாமிநாதன் தெரு 1 எண், பாம்பன் சுவாமிகள் சாலை -3, கலைவாணர் சாலை- 4 சுதா அவென்யூ- 1 ஆகிய இடங்களில் தூர் வாரும் பணிகள் நடந்தன.
ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு சாலையில் உள்ள மழைத்தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக கால்வாய் ஏற்படுத்திய காட்சி

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43வது வார்டுக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் தெரு, வியாசர் தெரு, சர்வமங்களா நகர் 4வது தெரு, கருணாநிதி தெரு ஆகிய தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அவர்களின் கோரிக்கை ஏற்று மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தனது சொந்த முயற்சியில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு சாலையில் உள்ள மழைத்தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக கால்வாய் ஏற்படுத்திய காட்சி.
அதிகாரிகள் அலட்சியம் மழை நீர் கால்வாயில் விழுந்த பெண் படுகாயம்

அதிகாரிகளின் அலட்சியத்தால் பல்லாவரத்தில் மழைநீர் வடிகால்வாயில் விழந்த வயதான பெண்ணுக்கு மார்பு, கையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் பணியை மேற்கொண்டதால் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை பல்லாவரத்தில் இருந்து பம்மல் செல்லும் மெயின் ரோடு பஜனை கோயில் தெரு கண்டோன்மென்ட் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மழை நீர் தேங்கும் பிரச்சனை இருந்து வந்ததால், அதனை தவிர்க்க மழை நீர் […]
குரோம்பேட்டையில் நாற்றமடிக்கும் நல்லப்பா தெரு

குரோம்பேட்டை நல்லப்பா தெருவில் உள்ள மழை நீர் கால்வாய் மலஜலம் செல்லும் கால்வாயாக மாறியதால் அந்த பகுதியே துர்நாற்றம் அடிக்கிறது. நோய்கள் பரவுவதற்கு ஏதுவாக அமைந்து உள்ளது. தாம்பரம் மாநகராட்சி 35 வது வார்டில் உள்ளது நல்லப்பா தெரு குரோம்பேட்டையின் முக்கிய பகுதியான இங்கு ஏராளமான வீடுகளும் பூங்காக்கள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ராஜேந்திர பிரசாத் சாலையில் இந்தியன் வங்கி சாலையில் பாதாள சாக்கடை மூடி உள்ளது. கனரக வாகனங்கள் செல்வதால் அந்த […]
மழைநீர் வடிகால் தாமதத்தால் உயிரிழந்த எலக்ட்ரீசியன்

சென்னை தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் வேங்கைவாசல் பிரதான சாலையில் கடந்த 7 மாதமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ்புரம் ,வேங்கைவாசல் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து மாற்று வழியில் செல்கின்றனர். இதனால் ஏற்கனவே வேலைக்கு செல்பபவர்கள், பள்ளி மாணவர்கள் நெடுந்தூரம் நடந்து சென்று பேருந்தை பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வேங்கைவாசாலில் இருந்து சந்தோஷ்புரம் செல்வதற்காக சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த […]