அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் – தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடி

“தமிழ்நாட்டில் மட்டும் 6,205 பேர் சிறுநீரகத்துக்காக, 443 பேர் கல்லீரலுக்காக, 75 பேர் இதயத்துக்காக, 62 பேர் நுரையீரலுக்காக, காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 128 பேரின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, 733 பேர் பயனடைந்துள்ளனர். அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும்- தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி.