வளர்ப்பு நாய்கள் தாக்கி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக், ராட்வீலர், மாஸ்டிப் உள்ளிட்ட 23 வகையான கொடூர நாய்களை விற்பனை செய்வதற்கும், வளர்ப்பதற்கும் தடை விதிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது

ஏற்கனவே செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட இந்த இன நாய்களை மேலும் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க கருத்தடை செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாபோர்ட்ஷையர் டெரியர், பிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போயர்போல் கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகசியன் ஷெப்பர்ட் நாய், தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய், டோர்ன்ஜாக், சர்ப்லானினாக், ஜப்பானிய தோசா, அகிதா, மாஸ்டிப்ஸ், டெரியர்கள், ரோடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் நாய்கள், கனாரியோ, அக்பாஷ் […]

கூடலூரில் ஒரே வாரத்தில் வெறி நாய் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் பொதுமக்களை கடித்ததில் ஒரே வாரத்தில் 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் நாய்கடிக்கு ஆளாகி வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த நகராட்சி நி்ர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 20க்கும்‌ மேற்பட்டோரை வெறிநாய்கள் […]

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம்

இவரது மகன் அபி கார்த்திக் (வயது 6 ). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகில் கார்த்திக் லெனின், இவரது மனைவி திவ்யா ஆகியோர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டில் ஜெர்மன் நாட்டு இன ராட்வீலர் வகையை சேர்ந்த நாயை வளர்த்து வருகின்றனர். சம்பவத்தன்று சிறுவன் அபி கார்த்திக், தனது வீட்டு முன்பு சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் வெளிநாட்டு […]

நாய் கடித்ததில் தொழிலதிபர் உயிரிழந்த சோகம்

குஜராத்: அகமதாபாத்தில் தெருவில் சுற்றித் திரிந்த நாய்கள் கடித்ததில், Wagh Bakri டீ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பராக் தேசாய் (49) உயிரிழப்பு. அவரது வீட்டின் அருகில் காயங்களுடன் விழுந்து கிடந்தவரை கண்ட பாதுகாவலர், குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தெருநாய்களின் தொல்லை : – பொதுமக்கள் அச்சம் :

செம்பாக்கம் திருமலை நகர் 17வது தெருவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளையும், பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் விரட்டி பயமுறுத்துகிறது. தாம்பரம் மாநகராட்சி தலையிட்டு தெருநாய்களின் தொல்லையை விரைந்து தீர்க்குமாறு திருமலை நகர் 17தெரு பகுதிமக்கள் சார்பாக கேட்டு கொண்டுள்ளனர்.

தெருநாய்களின் தொல்லை – பொதுமக்கள் அச்சம் :

தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளையும், பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் பயமுறுத்திக்கின்றது. ஆதலால் அச்சத்தோடு அவ்விடத்தை கடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கின்றது. இதற்கு தாம்பரம் மாநகராட்சி தலையிட்டு தெருநாய்களின் தொல்லையை விரைந்து தீர்க்குமாறு திருமலை நகர் 17தெரு பகுதிமக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்.இடம்: திருமலை நகர் 17தெரு, சீயோன் பள்ளி எதிரில், செம்பாக்கம்.