இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்; 476 பேருக்கு ஒரு செவிலியர்

இந்தியாவில் சராசரியாக 834 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் சுகாதாரத்துறை இயங்கிவருவதாக மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், “என்.எம்.சி வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் 13 லட்சம் மருத்துவர்களும், 36 லட்சம் செவிலியர்களும் உள்ளனர். தற்போது 706 மருத்துவக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக MBBS இடங்களும் 127% உயர்ந்துள்ளது” என்றார்.

900 கருக்கலைப்பு செய்த டாக்டர் – அதிர்ச்சி தகவல்!

மைசூருவில் சட்ட விரோதமாக 900 கருக்கலைப்பு செய்த டாக்டர் மற்றும் லேப் டெக்னீஷியனை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரு நகரத்தில் டாக்டர் சந்தன் பலால் என்பவர் மருத்துவனை நடத்தி வந்தார். இவரது மருத்துவமனையில் நிசார் என்பவர் லேப் டெக்னீஷியனாகப் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக பல பெண்களுக்கு கருக்கலைப்புச் செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை […]

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மருந்துகளை விற்ற, 117 மருந்து விற்பனையக உரிமம் ரத்து

6 மாதங்களில் 117 மருந்து விற்பனையக உரிமங்கள் தற்காலிகமாக ரத்து- மக்கள் நல்வாழ்வுத்துறை மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள விற்பனையகங்களில் ஆய்வு.

பல்லாவரத்தில் நடுரோட்டில் லாரி டிரைவர்கள் டாக்டர் தம்பதியினரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த டாக்டர் மேகசியான் (வயது-33) இவர் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி தாரணி இவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். பல்லாவரம் ரேடியல் சாலையில் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி இருவரும் சென்ற கார் மீது லாரி மோதியது இதில் கார் சேதமான நிலையில் காரின் உரிமையாளர் லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு […]

ஏழைகளுக்கு இலவச மருத்துவம்.. அசத்தும் மணிகண்டன் மற்றும் அவர் மனைவி – மணிகண்டன் அந்த கிளாசிக் காமெடியனின் மகன்

இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இரு மாபெரும் நடிகர்களாக இருக்கப் போகிறவர்கள் கவுண்டமணி செந்தில் ஆகிய இருவரும் என்றால் அது சற்றும் மிகை அல்ல என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவர்களுடைய நகைச்சுவை இன்றளவும் பலரை சிரிக்க வைத்து வருகிறது. தமிழ் சினிமாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருபவர் தான் செந்தில். தற்பொழுது 72 வயதாகி உள்ள செந்தில் அவ்வப்போது சில திரைப்படங்களில் […]

டாக்டர் ஆன ஆக்டர்!

80களின் இளசுகள் ஜீஜியை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். காரணம், இரண்டே பாடல்கள் அவரை இன்று வரை சுமந்து வந்து கொண்டிருக்கின்றன. ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘பனி விழும் மலர்வனம்’ பாடல்களை இளையராஜாவின் இசையில் கேட்கும்போதெல்லாம், ஜீஜி மனசுக்குள் உலா வருவார். இரண்டு பாடல்களின் வரிகளையும் தலைப்பாகக் கொண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன. 1982ல் வெளிவந்த படம் ‘நினைவெல்லாம் நித்யா’. யதார்த்தமான காதல் கதைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீதர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய படம். […]

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி டாக்டர் மரணம்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக இவரது மருத்துவ அறிக்கைகள், மருத்துவ மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. . கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி, சருமத்தில் தடிப்புகள், கண்வலி, கடுமையான தலைவலி மற்றும் […]

நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல்

நடப்பு கல்வியாண்டு முதல், எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு, தேசிய எக்ஸிட் டெஸ்ட் என்ற, ‘நெக்ஸ்ட்’ தேர்வு அமல்படுத்தப்படும் என, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் நெக்ஸ்ட் நிலை 1, நெக்ஸ்ட் நிலை 2 என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்த உள்ளது. அதன்படி, ஐந்தரை ஆண்டுகள் கொண்ட எம்.பி.பி.எஸ்., படிப்பில், முதல் நான்கரை ஆண்டுகள் முடித்தபின், நெக்ஸ்ட் நிலை 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான் ஓராண்டு பயிற்சி டாக்டராக […]