விரைவில் மக்களவை தேர்தல் முடிவுகள் முன்னோட்டம் விரைவில்
எந்தெந்த தொகுதிகளில் யார்? ? வெற்றி பெறுகிறார்கள் என்ற தகவல்கள் முன்னோட்டமாக விரைவில் குழுவில் வெளிவர உள்ளது. திமுக கூட்டணி – 20, அதிமுக கூட்டணி -15,பாஜக கூட்டணி -5.
ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவிப்பு

ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
திமுக நிர்வாகி மீது ராதிகா புகார்

காஞ்சிபுரம் பிரசார கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறு பேச்சு நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதிகா சரத்குமார் தரப்பில் புகார் மனு
பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் பிரமாண்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தார்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகரம் பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பகுதி கழக செயலாளர் தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி அவர்கள் ஏற்பட்டில் பம்மல் மண்டல அலுவலகம் அருகில் அமைக்கப்பட்ட நீர்-மோர் பந்தலை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து மோர், தர்பூசணிபழம், இளநீர், கிர்ணிபழம், ரோஸ் மில்க், பாதாம் மில்க், பிஸ்தா மில்க், சாக்லேட் […]
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு

பல்லாவரம் தெற்கு பகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் பந்தலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்தார். சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அதிக அளவு வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது. நாள் தோரும் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார். கடும் கோடை வெயில் நிலவுவதால் மக்களின் தாகத்தை போக்கும் விதமாக அங்கு பல்லாவரம் தெற்கு பகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்து குளிர்ச்சி […]
தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, தாம்பரம் மாநகர திமுக தொழிலாளர் அணி சார்பில்,

மாநகர அமைப்பாளர் சிட்லப்பாக்கம் இரா.விஜயகுமார் தலைமையில், இன்று தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோடிரைவர்களுக்கு தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பல்வேறு நலத்திட்டஉதவிகளை வழங்கினார். அருகே மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன்,மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், பகுதிசெயலாளர்கள்செம்பாக்கம் இரா.சுரேஷ், கோட்டி உள்பட பலர் உள்ளனர்.
இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில்,பர்மா ரயில்பாதைஇரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில்,

தமிழ் மரபுப்படி தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் இன்று (01.05.2024) தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “நடுகல்“ திறப்பு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம்.எம் அப்துல்லா, தாய்லாந்து நாட்டிற்கான மலேசிய நாட்டின் தூதர் திரு.ஜோஜி சாமுவேல் ஆகியோர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. ரமேஷ் தர்மராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்களவை தேர்தல் முடிவிற்கு பின் அமைச்சரவை மாற்றம்

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் சரியாக செயல்படாத அமைச்சர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்
சின்னவர் லண்டன் சென்றார்?

பாராளுமன்றத் தேர்தலில் 24 நாட்கள் பிரசாரம் செய்தசின்னவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓய்வுக்காக லண்டன் சென்றார். வரும் 10ம் தேதி சென்னை திரும்புகிறார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்குதேவையான அனைத்துஉரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.