விசிக கூட்டணியின்றி திமுக வெற்றி பெற முடியாது என்ற ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரவிக்குமார் கண்டனம்

வடமாவட்டங்களில் விசிக கூட்டணியின்றி திமுக வெற்றி பெற முடியாது என்ற ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரவிக்குமார் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜூன பேசியது உண்மைக்கு மாறானது, மற்றும் அரசியல் ரீதியில் பக்குவமில்லாத பேச்சு என்றும் கண்டித்துள்ளார். கூட்டல் கழித்தல் கணக்குக்கு மாறாக கொள்கை அடிப்படையிலேயே திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதை அணுக வேண்டும். தமிழ்நாடு புதுவை உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற திமுகவும் முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.
உதயநிதி குறித்து விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவனுக்கு ராசா வலியுறுத்தல்

ஈரோடு: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து விமர்சனம் செய்தவிசிக துணை பொதுச் செயலாளர்மீது திருமாவளவன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதிமுக துணைப்பொதுச்செயலாள ரும் எம்.பி.யுமான ஆ.ராசா வலியுறுத்தி உள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுடனான கூட்டணி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். திமுகவினர் கொந்தளிப்பு: குறிப்பாக, அமைச்சர் உதயநிதியைக் குறிவைத்து, ‘சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் […]
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழை காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரும் பணியினை தொடங்குவதற்கு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் கோரிக்கை விடுத்தார்

இதையொட்டி மண்டலம் 3 சிட்லபாக்கம் 43வது வார்டில் மழைநீர் வடிகால்வாய்களை ஒப்பந்ததாரரின் மூலம் தூர் அகற்றும் பணி துவங்கி வைக்கப்பட்டது. அப்போது தி.மு.கழக நிர்வாகிகள் ப.இலக்ஷ்மணன், பார்தசாரதி, அருள் மற்றும் ஜெரி உடன் இருந்தனர்.
தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் 1 மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனை நிறைவு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் ஒன்றே மாறாதது என கூறியிருந்தார் முதல்வர்.
அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ விமானநிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவில் ரூ.7156 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அக்டோபர் 2_ல் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு…

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டாரா? மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா?

உணவக உரிமையாளரை அச்சுறுத்தியதாக சந்தேகம் எழுகிறது என, திமுக செய்தித் தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்க அவசியமில்லை என்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
விசிகவின் மது ஒழிப்பு மாநாடு – எல்.முருகன் கருத்து!

“திமுகவை மிரட்ட, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்”. “திருமாவளவனுக்கு எதாவது கோரிக்கை இருக்கலாம்”. “மது ஒழிப்பு மாநாட்டை மிரட்டுவதற்காக யுக்தியாக பார்க்கிறேன்”. “திருமாவளவன் ஒரு சாதி தலைவர், ஒட்டுமொத்த பட்டியலினத்திற்கான தலைவர் அல்ல”.
“விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம்”

விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் சார்பில் மது ஒழிப்பு மாநாடு – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
கோவை மாநகராட்சி மேயராக 29 வது வார்டு் திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக சான்றிதழை மாநகராட்சி ஆணையர் சிவகுருபாகரன் வழங்கினார்