தேமுதிக கட்சி கூட்டணிக்கு – தாமதம் ஏன்?

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இதுவரை இறுதி செய்யாத பிரேமலதா தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடிப்பதே கூட்டணியை இறுதி செய்யாததற்கு காரணம் என தகவல் திமுக, அதிமுக என இரு தரப்பினரிடம் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் திமுக தரப்பில் ஒற்றை இலக்கில் மட்டுமே சீட் எனவும், அதிமுக தரப்பில் இரட்டை இலக்கத்தில் சீட் கொடுக்க ஒப்புதல் எனவும் தகவல்.

அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி; தொகுதிகள் என்னென்ன?

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக கடந்த தேர்தலைப் போலவே 4 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் பரபரப்பு தேசம் முழுவதும் எதிரொலிக்கும் சூழலில், மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் அதிமுக – தேமுதிக கூட்டணி இறுதியாகியுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, 4 மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் […]

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல்!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம்.

“தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கும் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

தங்களின் கட்சிப்பணி சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்”- எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர். தேமுதிக பொதுச் செயலாளராக, சகோதரி பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பக்கபலமாக, இத்தனை ஆண்டுகள் மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்த சகோதரி, தமது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தேமுதிகவை பல படிகள் முன்கொண்டு செல்ல, பாஜக சார்பாக வாழ்த்துகள்- பாஜக மாநிலத்தலைவர் […]

தேமுதிக செயற்குழு, பொதுக்குழு வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 8.45 மணிக்கு தொடங்கும் என தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், தற்போது தேமுதிகவில் பொருளாளராக இருக்கும் விஜகாந்தின் மனைவி பிரேமலதா கட்சியின் எதிர்கால திட்டங்கள் வகுப்பது, மாவட்டச் செயலாளர் கூட்டங்கள் நடத்துவது, மாநாடு நடத்துவது குறித்து திட்டங்கள் தீட்டுவது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது […]

அரசியலில் இருந்து விலகுகிறார் விஜயகாந்த்..?

விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிரேமலதா தலைமையில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரேமலதாவை செயல் தலைவராக்குவது. விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. பிரேமலதா தலைவராகும் பட்சத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முற்றிலும் அரசியலில் இருந்து விலகி விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.