காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். அணையில் இருக்கும் நீரைத்தான் எங்களால் வழங்க முடியும் என்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது 50,000 கனஅடி நீர் வருகிறது என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு தண்ணி தர தான் மேகதாது அணை”-கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வித்யாசமான விளக்கம்

உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள். வறட்சி காலத்தில் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்னை வேண்டாம் போதுமான மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும். கடந்த வருடம் 400 டி.எம்.சி உபரி நீர் கடலுக்கு சென்றது; மேகதாது அணை இருந்தால் அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்க முடியும். உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது-கர்நாடக துணை […]
காவிரியில் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட முடிவு செய்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூர் சென்றுள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி

தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம்; அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது; தமிழர்கள் இங்கு வேலை செய்கின்றனர்; கன்னடர்கள் அங்கு வேலை செய்கின்றனர்; சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வேண்டும்!”