திறமை குறித்து விவாதிப்பதை விட, எங்களது ஆடை, அழகு குறித்து தான் பேசுகின்றனர் என இந்திய செஸ் வீராங்கனை திவ்யா தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தின் சர்வதேச செஸ் தொடர் நடந்தது.இந்தியா சார்பில் களமிறங்கிய திவ்யா தேஷ்முக் (நாக்பூர்) பங்கேற்றார். கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பை வென்ற இவர், இம்முறை சாலஞ்சர் பிரிவில் 12வது இடம் பிடித்தார். இத்தொடரின் போது பாலியல் ரீதியாக தொல்லைக்கு ஆளானதாக திவ்யா தெரிவித்துள்ளார். இது்குறித்து திவ்யா 18, வெளியிட்ட செய்தி, பொதுவாக செஸ் விளையாட்டில் வீரர்கள் செயல்பாடு, அவர்களது திறமை குறித்து மட்டும் தான் விவாதிப்பர். ஆனால் வீராங்கனைகள் தங்களது திறமைக்கு சற்றும் தொடர்பில்லாத […]