கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

மேலும் 2 நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வலியுறுத்திய மருத்துவக் குழு எனினும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார் மருத்துவர் பாலாஜி அடுத்த 6 வார காலம், மருத்துவர் பாலாஜி மருத்துவ விடுப்பில் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டண்ட் பொருத்தப்பட்டது உடல் நலம் தேறிய நிலையில், நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.

துரை தயாநிதி டிஸ்சார்ஜ்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் – சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 6 மாதங்களுக்கு மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

நெற்றியில் காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்

நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில் காயங்களுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து நெற்றியில் மூன்று தையல் மற்றும் மூக்கில் ஒரு தையல் போடப்பட்டது. அவருக்கு நரம்பியல், இருதயவியல் மற்றும் பொது மருத்துவ துறையின் தலைமை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஈசிஜி மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் […]