ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு அடைக்கலம்? – இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்திய விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிக்கு அவர் அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் […]

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்துள்ளார்

இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் விஜய். எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.முன்னதாக, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகின. இந்த […]

சிலம்பரசன் நடிக்கும் படத்தை தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்யப் போறார்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்குது. சிலம்பரசனின் 48வது படமான இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குமாம் . இந்நிலையில் இதில் கியாரா அத்வானியும், ஜான்வி கபூரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுது. இது கன்ஃபார்ம் ஆனால் ஜான்வி கபூர், தமிழில் அறிமுகமாகும் படமாக இது இருக்குமாக்கும்.

வேல்ஸ் பல்கலைக் கழகத்துடன் இயக்குனர் வெற்றிமாறன் ஒப்பந்தம்

திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனின் நிறுவனமான ஐ ஐ எப் சி மற்றும் வேல்ஸ் கல்வி குழுமம் மாணவர்களுக்கு திரைப்பட கல்வியை கட்டணம் இன்றி வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து. வேல்ஸ் பல்கலைக்கழகமும் பன்னாட்டுத் திரை பண்பாட்டு மையமும் இணைந்துபொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு மூன்றாண்டு திரைப்படக் கல்வியை கட்டணமின்றி வழங்குகிறது. இதற்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நிறுவனத்தலைவர் இயக்குநர் […]

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களை இன்று (28.03.2024) முகாம்‌ அலுவலகத்தில்‌, திரைப்பட இயக்குநர்‌ திரு.சங்கர்‌, அவரது மனைவி திருமதி ஈஸ்வரி சங்கர்‌ ஆகியோர்‌ சந்தித்து தங்களது மூத்த மகள்‌ திருமண அழைப்பிதழை வழங்கினர்‌.

திரைப்படம் நடித்து தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு நடிகர் யோகிபாபு மோசடி

திரைப்படம் நடித்து தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு நடிகர் யோகிபாபு மோசடி செய்வதாக தயாரிப்பாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.  சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாசீர் என்கிற  முகம்மது ஹாசீர். இவர் விருகம்பாக்கம் கோதாவரி தெருவில் “ரூபி பிலிம்ஸ்” என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். “வண்டி”, “கன்னிமாடம்”, “மங்கி டாங்கி” உள்ளிட்ட பல திரைப்படங்களை இந்நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுக […]

இயக்குநர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து மீது லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் உறவினர்கள் புகார்

தங்களின் சொத்துக்களை தங்களுக்கே தெரியாமல் விக்னேஷ் சிவனின் தந்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு. விக்னேஷ் சிவனின் தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன், நயன்தாரா மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகார் மனு.

நேற்று மாமன்னன் திரைப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்

“மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடத்துனராக இருந்தபோதே நடித்த ரஜினி.. ரகசியம் பகிர்ந்த மாரிமுத்து

ரஜினிகாந்த் நடத்துனராக இருந்தபோதே நடித்திருக்கிறார் என்று நடிகர் மாரிமுத்து தெரிவித்திருக்கிறார்.சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனவை. அவரது ஸ்டைல், நடை, உடை என அனைத்துமே இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. இதன் காரணமாகத்தான் அவர் இன்றுவரை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்க்களமாக அமர்ந்திருக்கிரார். மேலும் அவரது வழியை ஃபாலோ செய்துதான் பல நடிகர்கள் இருக்கிறார்கள் சறுக்கிய ரஜினி: ரஜினிகாந்த்துக்கு […]