கேரளாவைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற மர்மநபர்கள் – எஸ்.பி. மருத்துவமனையில் விசாரணை

மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்

அந்நிறுவனத்தில் இருந்து எடுக்கப்பட்ட 4 நெய் மாதிரிகள் தரமற்ற இருந்தது சோதனையில் தெரியவந்ததையடுத்து நடவடிக்கை..!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மே 17ம் தேதி கோடை விழா மற்றும் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி துவங்கியது

கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 10 உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பல ஆயிரம் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு கோடி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பூங்காவில் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை 360 டிகிரியில் சுழன்று வீடியோ எடுக்க புதிய கருவி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 தினங்களில் 20 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் பிரயண்ட் பூங்காவிற்கு வந்து சென்றுள்ளனர்.இதன்மூலம் நுழைவு கட்டணமாக ரூ.13 லட்சத்து 42 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சாரல் மழை பெய்து […]

திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழைப்பதிவு

திண்டுக்கல்லில் இன்று காலை முதல் கனமழை பெய்து வந்த நிலையில், 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழைப் பதிவானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல்லில் காலை முதலே கனமழை பெய்து வந்தது. பல இடங்களில் மழைநீர் ஆற்றுவெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்ட நிர்வாகம், பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு குறித்து வெளியிட்ட தகவலில், இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை திண்டுக்கல்லில் 39 செ.மீ. மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் […]

வைகை அணையில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

சிறப்பு பூஜைகளுக்குப் பின் தேனி மாவட்ட ஆட்சியா சஜீவனா, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி, முன்னிலையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பாசன நீரை திறந்து விட்டனர்.

திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னகரம் பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சார வாரிய துறையில் நிர்வாக பொறியாளர் ஆக பணிபுரியும் காளிமுத்து என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை. நேற்றைய தினம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மின்வாரிய நிர்வாக பொறியாளர் ஆக பணிபுரியும் காளிமுத்து வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

திண்டுக்கல் பழனி சாலையில் முத்தனம் பட்டி பகுதியில் ஹோட்டலுக்கு அரசு பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மேலும் இரண்டு பேர் படுகாயம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்