பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது

நேற்று இரவு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தவிலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.102.63க்கு விற்கப்பட்டது. இன்று 1.88 ரூபாய் குறைந்து 100.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கு விற்கப்பட்டது. இன்று 1.90 ரூபாய் குறைத்து ரூ.92.34க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படலாம் ,மோடி தலைமையில் இன்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் ..

கடந்த முறை நடந்த இக்கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை ₹200 குறைக்கப்பட்டது. 5 மாநில தேர்தல் மற்றும் அடுத்தாண்டு மக்களவை தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் 457வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை!