உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புகழாரம் சூட்டியுள்ளார்

விராட் கோலிக்கும் தனக்கும் இடையிலான நட்பு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தோனி மனம் திறந்தார். கோலியுடன் இணைந்து விளையாடியபோது அதிகமாக 2 மற்றும் 3 ரன்களை தாங்கள் எடுப்போம் என்றும் கோலியுடன் இணைந்து ஆடுவது ஜாலியாக இருக்கும் என்றும் தோனி கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

2013ம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அறிக்கை அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். […]