டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை

தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம்‌, சேலையூர்‌ ஜானகிராமன்‌ நகர்‌ பகுதியில்‌ நடைபெற்று வரும்‌ டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மக்களிடையே டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்‌. இந்த ஆய்வின்போது, நகர்‌ நல அலுவலர்‌, துப்புரவு அலுவலர்‌, துப்புரவு ஆய்வாளர்‌ உட்பட பலர்‌ உடனிருந்தனர்‌.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி டாக்டர் மரணம்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக இவரது மருத்துவ அறிக்கைகள், மருத்துவ மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. . கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி, சருமத்தில் தடிப்புகள், கண்வலி, கடுமையான தலைவலி மற்றும் […]

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி…

டெங்கு சிகிச்சைக்கு 6 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி 4 பெண்கள் மற்றும் 2 ஆண்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது டெங்கு பாதிப்புக்கு என தனி வார்டு இல்லாததால் மக்கள் அச்சம் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்குமாறு கோரிக்கை

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் அபாயம்

செப்டெம்பர் மாதத்தின் கடந்த சில நாட்களில் சுமார் 1000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.மழையுடன் சில பிரதேசங்களில் நுளம்பு அடர்த்தி அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அதன் பணிப்பாளர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாடு முழுவதும் இதுவரை சுமார் 63,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன. இம்மாதம் 12 ஆம் திகதிக்குள் மாத்திரம் அதன் எண்ணிக்கை 1,000 ஐ எட்டியுள்ளது. தினசரி பதிவாகும் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் கணிசமாகக் […]