சீனாவில் வேகமாக பரவும் சிக்குன்குனியா
சீனாவின் குவாங்டாங் பகுதியிப் சிக்குன்குனியா காய்ச்சல்; வேகமாக பரவி வருகிறது கடந்த வாரத்தில் மட்டும் 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்; காய்ச்சல் பரவலை கருத்தில் கொண்டு சீனாவிற்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அமெரிக்கா தன் நாட்டவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
சென்னை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு
சென்னை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு டெங்கு பாதிப்பு அதிகமாகும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்🕷️
செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்குவில் இருந்து நம்மை காக்கும் பிற மூலிகைகள்.!

டெங்கு காய்ச்சலுக்கு தமிழக அரசு நிலவேம்பு குடிநீரை பரிந்துரைக்கிறது.அதுமட்டுமல்லாமல் விஷ்ணுகரந்தை, சீந்தில், மலைவேம்பு, கருந்துளசி, பற்பாடகம், கண்டங்கத்திரி, தூதுவளை, வில்வம், வன்னி போன்ற இலைகள் பலன் தரும்.தினமும் ஒரு மூலிகையை எடுத்து சீரகம், மிளகு சேர்த்து கஷாயமாக்கி அதை குடித்து வரலாம்.இது மட்டுமல்லாமல் சுதர்சன சூரணம், தாளிசாதி சூரணம் வசந்த குசுமாவரம் போன்ற சித்தமருத்துகளை சித்த மருத்துவரின் மேற்பார்வையில் சாப்பிடலாம்.சுயமாக எடுத்தல் கூடாது.
டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் அதனால் கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் மழலையர் பள்ளியை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று திறந்து வைத்தார் பின்னார் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ராதாகிருஷ்ணன். சென்னை மாநகராட்சி பொருத்தவரை 420 பள்ளிகள் இருக்கிறது பத்தாவது மற்றும் 12வது வகுப்பு மார்க்கை வைத்து நம் எடை போடுகிறோம். மாநகராட்சி பள்ளியின் செல்லிங் பான்ட் என்னவென்றால் யார் வேண்டுமானாலும் அந்த பள்ளியில் படிக்கலாம் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற காரணத்திற்காக அவருடைய கல்வித்தரத்தை தனிக்கவனம் செலுத்தி பத்தாவது மற்றும் […]
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

9 பேர் டெங்குவுக்காகவும், 23 பேர் காய்ச்சலுக்காகவும் அனுமதி. டெங்கு எச்சரிக்கைக்கு முன்னதாக 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 4 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
டெங்கு காய்ச்சல் இருந்து பாதுகாப்பது எப்படி-?

கொசுக்களில் இருந்து பரவும் டெங்கு காய்ச்சல் உடல் ஆரோக்கியத்தை பலவீனப்படுத்தக் கூடியது.காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வாந்தி, வயிற்று வலி, கண்களையொட்டிய பகுதியில் வலி, எலும்பு பகுதிகளில் வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். காய்ச்சலுடன் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை பெறுவது நோயின் வீரியத்தை குறைக்க உதவும். ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நீண்டகாலத்துக்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக […]
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி
டெங்கு போன்ற நோய்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது

அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகள் போதுமான அளவிற்கு உள்ளது. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காலை 9.00 மணி அளவில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை எப்போது முடிவுக்கு வருகிறதோ, அதுவரை இந்த முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்- சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி.
குரோம்பேட்டையில் சாக்கடையில் மிதக்கும் நடேசன் நகர் | டெங்கு பரவும் அபாயம்

குரோம்பேட்டை நடேசன் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன .இந்த பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய்விட்டது. தற்போது அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை மற்றும் பல இடங்களில் உள்ள கழிவுநீரும் சாக்கடை நீரும் கலந்து தெருக்களில் ஓடுகிறது.தாம்பரத்தில் மழை பெய்த போது கூட மற்ற பகுதிகளில் மழை நீர் உடனடியாக வடிந்துவிட்டது. ஆனால் இந்த பகுதியில் மழை நீர் கால்வாய் காணாமல் போய்விட்டதால் தெருக்களில் தண்ணீர் தேங்கி […]