டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிடம் இருந்து 2014 முதல் 2022-ம் ஆண்டு வரை ஆம் ஆத்மி கட்சி ரூ.134 கோடி பணம் பெற்றதாக குற்றம்சாட்டி, என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை. உலக இந்து கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அஸ்ஸூ மோங்கியா அளித்த புகாரில் துணைநிலை ஆளுநர் உத்தரவு. பதவியில் உள்ள முதலமைச்சர் மீது என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைப்பது இதுவே முதல்முறையாகும்.

டெல்லி முதல்வர் எந்நேரமும் கைது?

சரத்பவார் எச்சரிக்கை! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திரா பவார்) கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சரத்பவார் கூறியதாவது,ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் சிபுசோரனை கைது செய்தனர். டெல்லியில் இரண்டு அமைச்சர்களை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இப்போது டெல்லி முதல்வருக்கு ஏழாவது முறையாக அமலாக்கத்துறை சமன் அனுப்பி உள்ளது. இன்று அல்லது நாளை கூட அவர் […]