காவிரி நீர் விவகாரத்தில் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள்

துரைமுருகன் தலைமையில் டெல்லி செல்லும் தமிழக அனைத்துக்கட்சி எம்.பிக்கள் 12 பேர் அடங்கிய குழு திமுகவின் டி.ஆர்பாலு, காங்கிரசின் ஜோதிமணி, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் சந்திரசேகரன் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மதிமுகவின் வைகோ, விசிகவின் திருமாவளவன், பாமகவின் அன்புமணி, தமாகாவின் ஜி.கே.வாசன் இடம் பெற்றுள்ளனர். சுப்பராயன்(சிபிஐ), ஆர்.நடராசன்(சிபிஎம்), சின்னராஜ்(கொமதேக), நவாஸ் கனி(இ.யூ.மு.லீ) இடம் பெற்றுள்ளனர்.

டெல்லியில் நடைபெறும் G20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

ஆப்பிரிக்க ஒன்றியத்தை நிரந்தர ஜி20 உறுப்பினராக்க இந்தியா முன்வந்துள்ளது; அனைத்து உறுப்பினர்களும் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்”

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி ஜனாதிபதி சிறப்பு விருந்து அளிக்கிறார்.

ஜி20 மாநாடு – டெல்லியில் விடுமுறை

டெல்லியில் ஜி20 மாநாட்டை முன்னிட்டு செப். 8 முதல் செப். 10 வரை விடுமுறை அறிவிப்பு. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.

ஆ.ராசா மீது டெல்லி காவல்துறையில் புகார்!

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசா மீது டெல்லி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் புகார்! முன்னதாக சனாதனம் HIV போன்றது என ஆ.ராசா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது!

டெல்லியில் நடக்க உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ள மாட்டார்;

சீன பிரதமர் லி கியாங் தலைமையில் சீனக்குழு பங்கேற்கும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு

அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளனர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலராக அங்கீகரித்தது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது. அதிமுக விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புதான் இறுதி முடிவு என்பதை தாங்கள் புரிந்து வைத்திருப்பதாக ஆணையம் பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.