டெல்லி சுதந்திர பூங்காவுக்கு ம.பொ.சி வீட்டு மண்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த பகுதி மண் சேகரிக்கப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டது. என் மண் என் தேசம் என்ற திட்டத்தின் படி சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த, வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் இருந்து ஒரு பிடி மண் எடுக்கப்பட்டு தலைநகர் டெல்லியில் போர் நினைவு சின்னம் இருக்கக்கூடிய பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை சுற்றி அந்த மண் தூவப்பட்டு 7500 மரங்களை நடை திட்டமிட்டுள்ளனர்.இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் […]
டெல்லியில் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடிப்பாரா..?

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் அதிக ரன் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை கோலி படைப்பாரா.? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. முன்னாள் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இங்கு 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 300 ரன்கள் எடுத்தார். கோலி 7 போட்டிகளில் 222 ரன்கள் எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 79 ரன்கள் எடுத்தால் சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார். முறியடிப்பாரா என பார்ப்போம்!
டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ வீட்டில் இ.டி சோதனை

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. பண மோசடி வழக்கில் எம்.எல்.ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது

5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்க இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
இந்தியாநியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை கைது செய்தது டெல்லி போலீஸ்

டெல்லி: நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை டெல்லி போலீஸ் கைது செய்தது. நியூஸ்கிளிக் இணையதள செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடந்தது. அமெரிக்க கோடீஸ்வரர் நெனவைல் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து நியூஸ்கிளிக் செய்தி ஊடகம் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. சீன ஆதரவுப் பிரச்சாரத்தை இந்தியாவில் மேற்கொள்வதற்காக அமெரிக்க கோடீஸ்வரர் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
அமித்ஷா, நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு: மாநில தலைவர் மாற்றம் இல்லை என அறிவிப்பு

சென்னை: டெல்லியில் கடந்த இரு நாட்களாக தங்கியிருந்த அண்ணாமலை, நேற்று அமித்ஷா மற்றும் நட்டாவை சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் அண்ணாமலையை மாற்றுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு சில அறிவுரைகளை மட்டும் வழங்கி அனுப்பியுள்ளனர். மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கூட்டணி உடைந்ததை ஒட்ட வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. அதிமுக, பாஜ இடையே மோதல் ஏற்பட்ட பிறகு அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் நேரடியாக கோரிக்கை […]
பாஜக அழைப்பின் பேரில் டெல்லி செல்லும் ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்க நாளை மறுநாள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் இணைந்து டெல்லி செல்ல உள்ளதாக தகவல். டெல்லி செல்லும் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி.தினகரனும் இணைந்து ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.
தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் திறக்க ஆணை!

டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்.15 வரை வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விட ஆணை!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் தொடங்கியது

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையில் கூட்டம் நடக்கிறது. நிலுவையில் உள்ள அளவையும் சேர்த்து, வினாடிக்கு 12,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும். அக்டோபர் மாதத்தில் திறக்க வேண்டிய 22.14 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் திறக்க வேண்டும் – தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை
மக்களவையில் தாக்கல் செய்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது: ஆதரவு 454; எதிர்ப்பு 2

புதுடெல்லி: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 454 வாக்குகளும், எதிர்த்து 2 வாக்குகளும் பதிவானது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. முதல்நாள் பழைய நாடாளுமன்றத்தில் அவை நடந்தது. அதை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெயர்ந்தது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், மசோதாவை தாக்கல் செய்தார். […]