டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள், இனி தேசத்திற்கு எதிராக கோஷமிடுபவர்களுக்கு ரூ.10,000 அபராதமும், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டால் ரூ.20,000 அபராதமும் விதிக்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது

I.N.D.I.A கூட்டணியின் நான்காவது கூட்டம் டிசம்பர் 19ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது

ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார், தொகுதி பங்கீடு, சட்டமன்றத் தேர்தல் தோல்விகள், பிரசாரம், சமூக வலைத்தளங்களில் மக்களிடையே விழிப்புணர்வு போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது

டெல்லியில் காலி மனையில் உள்ள ஒரு சுவற்றில் கடவுள் உருவம் தெரிந்ததாக வதந்தி பரவியது

மக்கள் கூடுவதை தவிர்க்க வீட்டின் பின்புறம் கருப்பு பெயிண்ட் அடித்த வீட்டின் உரிமையாளர். அதே சுவற்றில் ‘JAI HINDU’ என எழுதி மீண்டும் வழிபடத் தொடங்கிய பொதுமக்கள்!

விதிகளுக்கு உட்பட்டு நடுவரிடம் முறையிட்டேன்” – மேத்யூஸ் டைம்டு அவுட் குறித்து ஷகிப் அல் ஹசன்

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விவாத பொருளாகி உள்ளது இலங்கை வீரர் மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த விதம். கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இது நடந்தது. இந்த சூழலில் அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன். “இப்போது நடுவரிடம் முறையிட்டால் மேத்யூஸ் வெளியேற வேண்டும் என எங்கள் அணியின் ஃபீல்டர் […]

வரலாற்றில் முதல் முறை ‘டைம்டு அவுட்’ ஆன ஏஞ்சலோ மேத்யூஸ் – நடந்தது என்ன?

டெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதன்மூலம் 140 ஆண்டுகளுக்கும் மேலான உலக கிரிக்கெட் வரலாற்றில் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் ஆகியுள்ளார் ஏஞ்சலோ மேத்யூஸ். இந்த விதத்தில் இது ஒரு எதிர்மறை உலக சாதனை. முதல் பந்தை சந்திக்க காலதாமதம் செய்ததன் காரணமாக, வங்கதேச முறையீட்டினை அடுத்து நடுவர்களால் மேத்யூஸ் டைம்டு அவுட் செய்யப்பட்டார். டைம்டு அவுட்: இந்த விதிமுறையை […]

காற்று மாசு – ரூ.10,000 அபராதம்

“வாகனங்களில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண் முறை வரும் நவ.13 – 20ம் தேதி வரை அமல்படுத்தப்படும்; டெல்லியில் வரும் 11-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும்; 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும்; காற்று மாசு தொடர்பான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்”

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தொடர்பாக வீரர்களின் நலனுக்காக நிபுணர்களிடம் ஆலோசிக்கிறது ஐசிசி.உலகக்கோப்பை தொடரில் டெல்லியில் வங்கதேசம் –இலங்கை இன்று மோதவுள்ள நிலையில் ஐசிசி ஆலோசனை நடத்துகிறது

டெல்லி சமூகநலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை…

டெல்லி சமூகநலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஹவாலா பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் ராஜ்குமார் இல்லத்தில் சோதனை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது…

டெல்லியில் மத்திய அமைச்சர் முரளிதரன் உடன் திமுக எம் பி டி ஆர் பாலு நேரில் சந்திப்பு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை. மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய அமைச்சரிடம் வழங்கினார். சந்திப்பின்போது மீனவர்கள் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.