விவசாயிகளின் கோரிக்கை குறித்து பேச தயார் – மத்திய அரசு அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய அரசு அறிவிப்பு மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா, விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு நேரம் கடத்தவே பேச்சுவார்த்தை நடத்துவதாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு

6 மாசத்திற்கு உணவு, பதுங்க ஆசிரமங்கள்! டெல்லி விவசாயிகள் போராட்டம்.

உளவு துறை சீக்ரெட் ரிப்போர்ட் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், இது தொடர்பான உளவு துறை ரிப்போர்ட் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசு கடந்த 2020ஆம் ஆண்டில் வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் டிச. மாதம் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் சுமார் ஓராண்டு வரை நீண்டது. அதன் பின்னரே வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது இதற்கிடையே […]

சென்னை, டெல்லி உட்பட 10 நகரங்களில் அனல் காற்றால் இறப்பு விகிதம் அதிகரிக்கும்: சர்வதேச இதழில் ஆய்வுத் தகவல்

புதுடெல்லி: `அனல் காற்றின் விளைவால் இந்தியாவில் ஏற்படும் இறப்பு விகிதம்: விரிவான நகர ஆய்வு’ என்றதலைப்பில் ஒரு ஆய்வு சென்னை,டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே,வாராணசி, சிம்லா, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சுற்றுச்சூழல் தொடர்பான சர்வதேச இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் மாதங்களில் சென்னை, டெல்லி உட்பட 10 நகரங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிக சராசரி வெப்பநிலையானது ஒரு வருடத்தில் 97% […]

டெல்லியில் 5ம் வகுப்பு வரை 5 நாட்களுக்கு விடுமுறை

டெல்லியில் நிலவும் குளிர் காரணமாக மழலையர் பள்ளிகள் முதல் 5ம் வகுப்பு வரை அடுத்த 5 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து டெல்லி மாநில அரசு உத்தரவு .

வாஜ்பாய் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை.

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. ▪️ வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். ▪️ தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்

டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணியாக செல்கின்றனர். ஜனநாயகத்தை காப்போம் என்ற பதாகையை கையில் ஏந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அமித்ஷா விளக்கம் தர வலியுறுத்தி முழக்கமிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்டை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவார் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.