ரக்‌ஷா பந்தன் – பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்

டெல்லியில் பள்ளி குழந்தைகளிடம் ராக்கி கட்டிக்கொண்ட பிரதமர் மோடி ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து “உங்கள் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்க்கையில் செழிப்பையும் கொண்டு வரட்டும்”

டெல்லி: நாடு திரும்பினார் வினேஷ் போகத்

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிச்சுற்றில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நாடு திரும்பினார் பாரிஸில் இருந்து டெல்லி திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத் டெல்லி விமான நிலையத்தில், வினேஷ் போஹத்திற்கு உற்சாக வரவேற்பு மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய வினேஷ் போஹத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால், பதக்க வாய்ப்பை இழந்தார் உணர்ச்சிவசப்பட்ட வினேஷுக்கு ஆறுதல் கூறிய சாக்‌ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா

நிதி ஆயோக் கூட்டம் – காங்கிரஸ் புறக்கணிப்பு

டெல்லியில் ஜூலை 27ல் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு ஏற்கனவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

தமிழக மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து மிகவும் ஆக்கப்பூர்வ சந்திப்பை மேற்கொண்டேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதாகி உள்ளதால் ஜாஃபர் சாதிக் சிறையில்தான் இருப்பார்.