மின்னல் தாக்கியதில் நடுவானில் ஆட்டம்போட்ட விமானம்.. மரண பீதியில் பயணிகள்*

டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் நடுவானில் குலுங்கியுள்ளது. இதனால், விமான பயணிகள் பீதியின் உச்சத்தில் இருந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமானம் சேதமடைந்த நிலையில் விமானியின் சாதுர்யத்தால், 227 பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) டெரெக் ஓ‘பிரையன், சாகரிகா கோஸ், நதிமுல் ஹக், மம்தா தாக்கூர் மற்றும் மனாஸ் பூயான் ஆகியோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்

மதுரையில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து வருவதாகவும் வெகு விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (27.9.2024) புதுதில்லியில்‌ உள்ள பிரதமர்‌ அலுவலகத்தில்‌, மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து,

சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தை செயல்படுத்திட தேவையான ஒன்றிய அரசின்‌ நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால்‌ இந்திய மீனவர்கள்‌ கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுவினை வழங்கினார்‌. இச்சந்திப்பின்போது, கழக மக்களவை குழுத்‌ தலைவர்‌ திரு. டி.ஆர்‌.பாலு, கழக நாடாளுமன்றக்‌ குழுத்‌ தலைவர்‌ திருமதி கனிமொழி, தலைமைச்‌ செயலாளர்‌ திரு. நா. முருகானந்தம்‌, இ.ஆ.ப., ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களை சந்திப்பதற்காக புதுதில்லி வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌

தமிழ்நாட்டின்‌ வளர்ச்சித்‌ திட்டங்களுக்கு ஒன்றிய அரசின்‌ நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களை சந்திப்பதற்காக புதுதில்லி வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்களை புதுதில்லி விமான நிலையத்தில்‌, கழக மக்களவை குழுத்‌ தலைவர்‌ திரு. டி.ஆர்‌.பாலு, மக்களவை மற்றும்‌ மாநிலங்களவை குழுத்‌ தலைவர்‌ திருமதி கனிமொழி, உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌, தமிழ்நாடு அரசின்‌ தில்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ஏ.கே.எஸ்‌. விஜயன்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க கோரிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளார்.தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்வருடன் முக்கிய அதிகாரிகள் மற்றும் எம்.பிக்கள் உடன் செல்கின்றனர்.பிரதமர் மோடி […]

“சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என்றபோதும் ஜாமின் “

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என்றபோதும் ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். 2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்ததால் சிறையிலிருந்து விரைவில் வெளியே வரவுள்ளார் கெஜ்ரிவால்.

மத்திய அமைச்சர் @AmitShah புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் I4C இன் முதல் நிறுவன தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சைபர் குற்றங்களை தடுப்பதற்கான முக்கிய முயற்சிகளை தொடங்கி வைத்தார்

சைபர் மோசடி தணிப்பு மையம் (CFMC), சமன்வே பிளாட்ஃபார்ம் (கூட்டு சைபர் கிரைம் விசாரணை வசதி அமைப்பு), ‘சைபர் கமாண்டோஸ்’ திட்டம் மற்றும் சந்தேக நபர் பதிவு ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.

காற்று மாசுபாடு காரணமாக டில்லிவாசிகளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகள் குறைகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது

சிகாகோ பல்கலைக்கழகத்தின் (EPIC) எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு செய்துள்ளது. ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: வட இந்திய சமவெளிகளில் மிகவும் மாசுபட்ட பகுதிகளில் ஒன்றான டில்லியில் வசிக்கும் 1.8 கோடி மக்கள் காற்றுமாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டில்லிவாசிகளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகள் குறைகிறது. 40% அதிகம்தற்போதைய மாசு அளவுகள் நீடித்தால், இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும் 8.5 வருட ஆயுட்காலத்தை இழக்க நேரிடும். இந்தியாவின் தலைநகரம் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான டில்லி, […]