நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி.

செங்கோட்டையில் 10வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்; 1000 சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு.: உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இந்தியர்கள் உருவாகி உள்ளனர்.இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் கிராமங்களில் இருந்து திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர்.இந்தியா நவீனத்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்தியா இந்த பயணத்தில் நிலையாக இருக்க நிலையான அரசு தேவை.நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான அரசை மக்கள் விரும்புகின்றனர்.இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை […]

என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அடிமையாகி விட்டார்.

சென்னையில் ‘வீராவேசம்’ செய்யும் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? என்எல்சி விரிவாக்க திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என மத்திய அரசு அறிவித்தும், அன்புமணியின் மவுனம் ஏன்? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை என்று கூறிவிட்டு சென்னை வந்திருக்க வேண்டாமா? மக்களை தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தை உருவாக்கி வருகிறார் அன்புமணி ராமதாஸ்-அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை.

டில்லியில் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் வடமாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று(ஆக. 05) காலை டில்லியில் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. வசந்த் விஹார் பகுதியிலும் மழை வெள்ளம் சாலையில் ஓடியது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இயல்பு நிலைக்கு திரும்பும் டில்லி

கனமழையால் டில்லியில் உள்ள யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நல்வாய்ப்பாக நேற்று மதியத்தில் இருந்து யமுனை ஆற்றின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேலும், பல இடங்களில் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். டில்லியில் இயல்பு நிலை திரும்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை

41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது.புதுடெல்லி, 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக, அரசு அதிகாரிகளுக்கு ஞாயிறு விடுமுறை ரத்து செய்யப்பட்டது. மேல்திசை காற்றில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக டெல்லி உள்ளிட்ட வடமேற்கு இந்திய மாநிலங்களில் நேற்று முன்தினம் மிக பலத்த மழை பெய்தது. நடப்பு மழைப்பருவத்தில் முதலாவது மிக பலத்த மழை இதுவே ஆகும். மழையால் டெல்லி […]

டெல்லி செல்லும் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை அதிகாரிகள் டெல்லி அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளதாகவும், அதற்கான ஆணை பெற்றுள்ளதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.