மதுரை சுற்றுலா ரெயில் தீ விபத்து – 10 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆக்ஸ்ட் 17ஆம் தேதி யாத்திரைப் பயணிகள் ரெயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர். இவர்களின் ரெயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரை போடி லயனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அந்த நேரத்தில் ரெயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் […]
தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை: கோவிலாம்பாக்கத்தில் தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சற்று தடுமாறி இரு சக்கரவாகனம் கீழே விழுந்தபோது, வேகமாக பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுமியின் மீது ஏறியது. அப்பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள், போக்குவரத்து விதிகளை சிறிதும் மதிக்காமல் அதிவேகத்தில் செல்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரம் – ஈபிஎஸ் இரங்கல்

“கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்” “குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” “குடும்பத்தாருக்கு உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலையும் வழங்க வேண்டும்”
சென்னை மாநகராட்சி, 146வது வார்டு மாமன்ற உறுப்பினர் காலமானார்…

பெருநகர சென்னை மாநகராட்சி, 146வது வார்டு மாமன்ற உறுப்பினரும், சுகாதார நிலைக்குழு உறுப்பினரும், சென்னை தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினருமான திரு. ஆலப்பாக்கம் கு.சண்முகம் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
நள்ளிரவில் மணிப்பூரில் கலவரம்; 3 பேர் சுட்டுக் கொலை

மணிப்பூரின் குவாக்டா பகுதியில் நேற்று (ஆக.4) நள்ளிரவில் நுழைந்த குக்கி இன மக்கள் மைத்ரேயி இன மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. இதற்கு பலிவாங்கும் நடவடிக்கையாக குக்கி இன மக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பதற்றம் நிலவி வருவதால் ஒன்றிய பாதுகாப்புப்படையும், காவல்துறையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
கல் குட்டையில் குளிக்க சென்றவர்கள் வாகனம் மரத்தில் மோதி இரண்டு பேர் பலி

தாம்பரம் அடுத்த சோமங்கலத்தை சேர்ந்தவர் விஜ்ய்26) இவருடன் கூலி வேலை செய்யும் ரமேஷ்(16) இருவரும் இன்று அங்குள்ள கல் குட்டையில் குளிக்க (பல்சர்-220) இருசக்கர வாகனத்தில் கிஷ்கிந் சாலையில் சென்றனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் திடிரென கட்டுப்பாடை இழந்து சாலையோரம் உள்ள காப்புகாட்டில் புகுந்து மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜய், ரமேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்கிறார்கள்.
கணவர் கண் முன் மனைவி தலை துண்டாகி பலி
பல்லாவரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் இவரது கணவர் சின்னையா இவர் தனியார் நிருவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பல்லாவத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து திருமுடிவாக்கத்தில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக கணவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட ,மனைவி நாகம்மாள் பின்னால் அமர்ந்த கொண்டு திருமுடிவாக்கம் நோக்கி அனகாபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மாடு மீது மோதி உள்ளது.பின்னால் அமர்ந்திருந்த மனைவி நாகம்மாள் வலது […]
ஒரு கோடி கடன் சிட்லபாக்கம் தம்பதி தற்கொலை

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ் (48) திருமுடிவாக்கத்தில் ஏ.கே ஆட்டோ மொபலைஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜொன்சிராணி குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர். இந்நிலையில் ஆட்டோ மொபல் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த பல நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை […]
தாய் திட்டியதால் தற்கொலை செய்த மாணவன் ஜமீன் பல்லாவரத்தில் பரிதாபம்

ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மாரியம்மாளின் கடைசி மகன் ஜெகதீஷ் என்பவர் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 08.00 மணி அளவில் ஜெகதீஷின் தாயார் மாரியம்மாள் வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடித்து வைக்காததை கண்டித்து அண்ணன் ஜனார்த்தனன் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் திட்டி கையால் அடித்து விட்டு அவர் வேலைக்கு கிளம்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த […]
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி வாலிபர் வெட்டி படுகொலை
செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் அருகே நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக ஆஜராக வந்தவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது இச்சம்பவத்தில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகள் வீசி அறிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சேர்ந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பலை […]