தோழர் சங்கரய்யாவின் மறைவு தமிழக அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பு .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்.

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமான செய்தி பெரும் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என தாம் நம்பிக்கை கொண்டிருந்தாக, நிலையில், சங்கரய்யாவின் மறைவு மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 3 […]

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் N. சங்கரய்யா காலமானார்.

1 தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தலைவர், தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல, தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் பகுதி. 2.அந்நியர் ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த சுதந்திர போர்க்களத்தில் மையப்புள்ளியாக விளங்கிய நகரங்களில் மதுரையும் ஒன்று… 3.படிப்பா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்வி மாணவரான சங்கரய்யாவின் நெஞ்சில் எழுந்தது. படிப்பை துறந்து நாட்டின் விடுதலைப் போராட்டப் பாதையை தனது வாழ்க்கை பாதையாக தேர்வு செய்தார்… 4 தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் […]

செல்போன் விபரீதம் மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் பலி

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சர்மா தெருவை சேர்ந்தவர் செந்தில் பிரசாத் (32),இவருடைய மனைவி ரன்ஜினி தேவி (30) இவருவரும் கிண்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் காலை ரன்ஜினி தேவி வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் இருந்த செந்தில் பிரசாத் செல்போனில் தொடர்பு கொண்ட போது எடுக்காததால் சந்தேகமடைந்த ரன்ஜினி தேவி வீட்டிற்க்கு சென்று பார்த்த போது பால்கனியில் செந்தில் பிரசாத் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து […]

ஆவடியில் விரைவு ரயில் மோதி 2 பேர் பலி!

ஆவடி ரயில் நிலையத்தில்விரைவு ரயில் மோதி2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவடி ரயில் நிலையத்தில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் பகுதியில் கேட் இல்லை எனக் கூறப்படுகிறது.பயணிகளே இரு பக்கமும் பார்த்துவிட்டு தண்டவாளத்தைக் கடந்து செல்லும் சூழலே நிலவி வருகிறது. ரயில் வருவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் (செப். 24) இரவு 9 மணியளவில், பயணிகள் அவ்வாறு தண்டவாளத்தைக் கடக்கும்போது திடீரென இரண்டு தண்டவாளத்திலும் எதிரெதிரே விரைவு […]

தாம்பரம் அருகே பாஜக பிரமுகர் கொலை ஏன்? தலையை சிதைத்த கொடூரம்

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மற்றும் பிஜேபி நிர்வாகியான வெங்கடேசன் என்கிற பெரி வெங்கடேசன் இவர் மீது பீர்கன்காரனை காவல் நிலையத்தில் 2015ம் ஆண்டு கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளார். மேலும் தாம்பரம், சேலையூர் போன்ற காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலவியில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை குட்வில் நகரில் உள்ள காலி மைதானத்தில் தலை முற்றிலுமாக சிதைக்கபட்ட நிலையில் வெங்கடேசன் சடலமாக இருப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் […]

கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த இருவர் உயிரிழப்பு.

நிபா வைரஸ் பரவலை உறுதிப்படுத்தினார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது மாதிரிகள் பூனாவிற்கு அனுப்பப்பட்டது..

பிரபல குணச்சித்திர நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம்

ஜெயிலர், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர், மாரிமுத்து. சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் மாரிமுத்துவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வருசநாடு பகுதிக்கு உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.

பெண்ணுடன் வாய் தகராறு கொலையாக மாறியது

சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (45) டெய்லர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரிதா (40) நாகல்கேணி பகுதியில் உள்ள காலணி கம்பனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பொதுகழிப்பிடத்தை யார் சுத்தம் செய்வது குறித்து கோபால் மற்றும் பக்கத்து வீட்டுகாரரான செல்வக்குமார் ஆகிய இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் மதுபோதையில் இருந்த இருவரும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த சரிதா […]

நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்

செப்டம்பர் 2, பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (வயது 67), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். கமல்ஹாசனின் படங்களில் தொடர்ந்து நடித்த அவர் , “சார்… நீங்க எங்கயோ போயிட்டீங்க” என்று ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற படத்தில் ஜனகராஜிடம் பேசிய வசனம் புகழ்பெற்றது.

மதுரை சுற்றுலா ரயில் விபத்தில் பலி 10 ஆக உயர்வு

மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து விட்டது. இறந்தவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்கள். அங்கிருந்து 60 பேர் ஆன்மிகப் பயணமாக வந்தனர். இவர்கள் திருவனந்த புரத்தில் சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து நேற்று அதிகாலையில் மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையில் அவர்கள் வந்த பெட்டி தனியாக கழற்றி விடப்பட்டது. அந்த பெட்டியில் உள்ளே பூட்டிக்கொண்டு சமைத்த போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தியதால் இந்த தீ […]