சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்குதேவையான அனைத்துஉரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

உடல் எடை குறைப்பு சிகிச்சையில் என்ஜீனியர் பலி பம்மல் டாக்டர் மீது புகார்

பம்மல் தனியார் மருத்துவ மனையில் ஐ.டி பொறியாளருக்கு எடை குறைப்பு, குடல் சுருக்க அறுவை சிகிச்சை. மருத்துவர் முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால் மகன் உயிரிழந்ததாக தந்தை காவல் நிலையத்தில் புகார். பாண்டிச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வநாதன்(52) அரசு ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் கிளினராக பணி செய்துவருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள், முதல் மகன் பி.டெக் ஐடி படித்த ஏமசந்திரன்(26) உடல் பருமன் பாதிப்பு காரணமாக 156 கிலே எடையுடன் இருந்துள்ளார். இவரின் இரண்டாவது மகன் […]

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

ஹைதராபாத் மாநகரில் ஒரு நாளுக்கு 70 பேரை தெருநாய்கள் கடிப்பதாகவும், மாதம் சுமார் இருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத் தெருக்களில் சுமார் 4 லட்சம் நாய்கள் சுற்றி வருவதாகவும், அதில் 90,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படாமல் இருப்பதாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2022-ல் 19,847 பேரும், 2023-ல் 26,349 பேரும் தெருநாய் கடித்து பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 9,208 பேர் […]

சிட்லபாக்கத்தில் வேகத்தடையில் வாகன மோதி தொழிலாளி பலி

சிட்லபாக்கத்தில் வேகத்தடை காரணமாக இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார். முறையாக வேகத்தடை, எச்சரிக்கை கோடுகள் அமைக்க வில்லை என சாலை அமைத்த ஒப்பந்ததார், மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது, சிசிடிசி காட்சி உள்ளது. சேலம் மாவட்டம் தலவாசல் அடுத்த வீரனூர் பகுதியை பூர்விகமா கொண்ட கூலி தொழிலாளி கோவிந்தராஜ் (34), இவர் மனைவி சந்தோசம், இரண்டு மகன், ஒரு மகளுடன் சிட்லப்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். […]

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் சிபிசிஐடி போலீசார் நாளை மீண்டும் விசாரணை

ஜாமினில் உள்ள சயானுக்கு, நாளை கோவை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கடந்த 5ஆம் தேதி சம்மன் கொடநாடு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ள பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன் தகவல் பரிமாற்ற விபரங்கள் ஏற்கனவே மீட்பு.

காவல் நிலைய மரணம் – பிரேத பரிசோதனை செய்க”

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலையத்தில் மரணமடைந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஈரோடு எஸ்.பி., பெருந்துறை டி.எஸ்.பி-யின் தனிப்படை போலீசார், ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதால் பாலகிருஷ்ணன் மரணம் என சகோதரர் வழக்கு பிரேத பரிசோதனையை வேறு அரசு மருத்துவமனையில் நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்யவும், நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் […]

மாடம்பாக்கத்தில் ஆசிரியை உயிரைக் குடித்த கொசுவத்தி

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் தங்கசாமி, இவர் மனை லிலாபாய் (75), ஒய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர், கணவன் மனைவி இருவரும் அதே மாடம்பாக்கத்தில் ( வாணி மெட்ரிக்குலேஷன் பள்ளி) நடத்திவந்த நிலையில் பள்ளி அருகிலேயே உள்ள வீட்டில் முதல் தளத்தில் வசித்தனர். தங்கசாமி வெளியே சென்ற நிலையில் லீலாபாய் மட்டும் தனியாக இருந்துள்ளார். அதிகம் புத்தகம், செய்திதாள் படிக்கும் பழக்கம் உள்ளவர்மேலும் 5 ஆண்டுகளாக உடல் நிலை பாதித்ததால் அவர் தனக்கு தேவையான புத்தகம் […]

சென்னையில் கனமழை காரணமாக இருவர் உயிரிழப்பு

சென்னை அசோக் நகர் லேக் வியூ சாலையில் சென்று கொண்டிருந்த மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார், இவர் தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்தாரா அல்லது மின்னல் தாக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை: தியாகராயநகர் வாணிமஹால் அருகே சென்று கொண்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்பு அணீப் என்பவர் தேங்கிய மழைநீரில் ஏற்பட்ட மின்சாரக்கசிவு காரணமாக உயிரிழந்தார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள அனைத்து மீன்களும் செத்து மிதக்கின்றன

இதனால் அந்த பகுதி மிகவும் துர்நாற்றம் அடைந்து பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளார்கள்

கிழக்கு தாம்பரத்தில் மரம் வெட்டிய தொழிலாளி கீழே விழுந்து பலி

கிழக்கு தாம்பரம் ரெயில்வே குடியிருப்பில் மரம் வெட்டும்போது கிளை முறிந்து கீழே விழுந்த திருவண்ணாமலை மாவட்டம் அணியாலை காம்பம்பட்டு கிராமத்தை குமரேசன்(32) பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழப்பு. இறந்த மரம் வெட்டும் கூலித்தொழிலாளிக்கு மனைவி, ஒருமகள் உள்ளனர். பிரேத்தை கைப்பற்றிய சேலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.