மூத்த காங்கிரஸ் தலைவர் கார்மேகத்திற்கு அஞ்சலி உருவப்படம் திறப்பு

மூத்த காங்கிரஸ் தலைவர் கார்மேகம் காலமானார். செங்கற்பட்டு மாவட்டத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் பா.கார்மேகம் கடந்த 23.5.2024 அன்று குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள அவரது மகன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்லகுமார் இல்லத்தில் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவாலும் காலமானார். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மீது அளவற்ற பற்று கொண்டு செயல்பட்டவர்.சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத், தலைவர் வாழப்பாடியார், கவிஞர் கண்ணதாசன், எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்ற தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிவர். தந்தை பெரியாரின் கருத்தால் ஈர்க்கப்பட்டு […]

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்

67 வயதான செல்வராஜ், 1989,1996,1998,2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்.

மூத்த பத்திரிக்கையாளர் சண்முகநாதன் காலமானார்

தினத்தந்தி ஐ சன்முகநாதன் என்கிற மூத்த பத்திரிகையாளர் ( 90) முதுமை காரணமாக இன்று ( 03-05-2024 )காலை 10.30 மணிக்கு இயற்கை எய்தினார். அண்ணாரது இறுதிச் சடங்கு நாளை 04-05- 2024 அன்று காலை 8 மணி அளவில் சென்னை முகப்பேரில் நடைபெறும். கடந்த ஆண்டு தமிழக அரசின் கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவர் சண்முகநாதன் ஐயா என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் மூழ்கி சாவு

ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் கல்குவாரியில குளிக்க சென்ற மூன்று மாணவர்கள் பலி.. ஒருவர் சடலம் மீட்பு செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கல்குவாரியில குளிக்க சென்ற பொத்தேரி எஸ்ஆர்எம் வள்ளியம்மை கல்லூரியில் பயின்று வந்த B.E.,இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முகமது இஸ்மாயில், விஜய்சாரதி, தீபக்சாரதி உள்ளிட்ட மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். தற்போது சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டு வருகின்றனர். இதில் இரண்டு மணிநேர போராட்த்திற்கு பிறகு விஜய்சாரதி உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்ற இருவரது உடல் […]

மாடியிலிருந்து விழுந்த இளைஞர் பலி மது போதையால் விபரீதம்

தாம்பரம் அருகே நண்பர்களுடன் மது அருந்திய இளைஞர் நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு. சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் அர்ஜூன் (36) தற்போது வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு தனது நண்பர் வீட்டின் இரண்டாவது தளத்தின் மொட்டை மாடியில் நான்கு பேருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. நண்பர்கள் மது அருந்திவிட்டு அவரவர் வீட்டிற்க்கு சென்ற நிலையில் நிலைதடுமாறிய அர்ஜூன் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார் அப்போது […]

தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் (69) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் ஆனந்த ராகம் என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான உமா ரமணன், நிழல்கள், தில்லுமுல்லு, வைதேகி காத்திருந்தாள், திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.

இரண்டாம்‌ உலகப்போரின்போது சியாம்‌ தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும்‌ பணியில்‌ உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின்‌ தியாகத்தை போற்றும்‌ வகையில்‌,பர்மா ரயில்பாதைஇரண்டாம்‌ உலகப்போரின்போது சியாம்‌ தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும்‌ பணியில்‌ உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின்‌ தியாகத்தை போற்றும்‌ வகையில்‌,

தமிழ்‌ மரபுப்படி தாய்லாந்து நாட்டின்‌, காஞ்சனபுரியில்‌ இன்று (01.05.2024) தாய்லாந்து தமிழ்‌ சங்கத்தின்‌ சார்பில்‌ நடைபெற்ற “நடுகல்‌“ திறப்பு விழாவில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ சார்பில்‌ மாண்புமிகு போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌.எஸ்‌. சிவசங்கர்‌, மாநிலங்களவை உறுப்பினர்‌ திரு. எம்‌.எம்‌ அப்துல்லா, தாய்லாந்து நாட்டிற்கான மலேசிய நாட்டின்‌ தூதர்‌ திரு.ஜோஜி சாமுவேல்‌ ஆகியோர்‌ திறந்து வைத்து மரியாதை செலுத்தினர்‌. இவ்விழாவில்‌ தாய்லாந்து தமிழ்ச்‌ சங்கத்தின்‌ தலைவர்‌ திரு. ரமேஷ்‌ தர்மராஜன்‌ மற்றும்‌ நிர்வாகிகள்‌ கலந்து கொண்டனர்‌.