சென்னையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு. சென்னை, எழும்பூர், நேருபூங்கா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு 8.9.2024 அன்று முற்பகல் திருச்சி-செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கிழக்குப் பகுதியில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது, கிஷோர் (வயது 20) த/பெ. ஜியாவுதீன்; கலைவேந்தன் (வயது 19) த/பெ.சண்முகம்: ஆண்டோ (வயது […]

இரும்பு தகடு விழுந்து பெண் பலி

இரும்பு தகடு சரிந்து விழுந்து நடந்து சென்ற 30 வயது பெண் பரிதாபமாக பலி. அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரேணுகா என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில்வசித்து வருகிறார். இவர் தரமணியில் உள்ள மென்பொருள் நிறுவனமான டிஎல்எப் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு எட்டு மணிக்கு பணி முடித்து வெளியே சென்ற போது. டிஎல்எப் வளாகத்தின் முன்பு இரும்பு பலகைகள் கட்டுமான பணிக்காக […]

“பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, இதை திட்டமிட்ட மற்றும் நடைமுறை படுத்தியவர்களையும் கைது செய்ய வேண்டும்;

தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சி செய்து வருகின்றனர், அதில் பாஜகவிற்கு முக்கிய பங்கு உண்டு” -சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி

பள்ளிக்கரணையில் ஏரியில் பாய்ந்த கார் உள்ளே இருந்த காவலாளி உயிரிழப்பு

பள்ளிக்கரணையில் கட்டுபாட்டை இழந்த கார் ஏரியில் பாய்ந்து முழுகியது. காரில் இருந்த தனியார் ஐ.டி நிறுவன பாதுகாவலர் உயிரிழப்பு. ஓட்டுனர் தப்பி கரை சேர்ந்தார் சென்னை அடுத்த சிறுச்சேரியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் கார் ஓட்டுனராக பணி செய்பவர் ராஜசேகர்(33), அதே ஐ.டி நிறுவனத்தில் இரவு பாதுகாவலராக பணி செய்பவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த கெளஷல்குமார்(27), வழக்கம் போல் இரவு பணி முடித்த ஐ.டி ஊழியர்களை பாதுகாவலர் கெளஷல்குமார் பாதுகாப்புடன் ஓட்டுனர் ராஜசேகர் […]

திமுக ஆட்சிக்கு வந்தபின்காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது

பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களுக்கும் பாதுகாப்பில்லை; திட்டமிட்டுதான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது எடப்பாடி பழனிசாமி

தாம்பரத்தில் பஸ் மோதி பூ விற்கும் மூதாட்டி பலி

தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலையை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு […]

கூட்ட நெரிசலில் சிக்கி உ.பி.யில் 116 பேர் பரிதாப பலி: சாமியாரின் சொற்பொழிவை கேட்க வந்தபோது விபரீதம்

ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தரஸ் மாவட்டத்தில் சாமியாரின் சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 116 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் புல்ராய் என்ற கிராமம் உள்ளது. இங்கு நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்கிற போலே பாபா எனும் சாமியாரின் மடம் அமைந்துள்ளது. அனைத்து மக்களாலும் போலே பாபா என்று அழைக்கப்படும் அவரது மடத்தில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் மனிதநேய மங்கள சந்திப்பு என்ற பெயரில் நேற்று சொற்பொழிவு நடைபெற்றது. […]

மூத்த பத்திரிகையாளர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

“ராமோஜி குழுமத்தின் நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்; ஊடகம், பத்திரிகை மற்றும் திரைப்படத் துறைகளில் அவராற்றிய பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கும்; இந்த கடினமான நேரத்தில் ராமோஜி ராவ்வின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அயனாவரம்: லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

சார்ஜரை கையில் பிடித்தவாரே இறந்து கிடந்துள்ளார். மின்சாரத்தில் விளையாடக்கூடாது ஸ்விட்ச் ஆப் செய்திருக்கும் போது தான் பிளக் செய்ய வேண்டும்.

கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா

தனது 17 வயதுடைய மகளிடம் பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய பெண், நேற்றிரவு மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்