மக்களவை தேர்தல் தேதி நாளை மாலை அறிவிப்பு

தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டம் மத்தியப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் 2 அல்லது 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம். உத்தரப் பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் மாநிலங்களில் 6-7 கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்பு மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல், மக்களவை […]

மார்ச் 15-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

மே 23. ந் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகள் முடிக்கப்பட்டு புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும் என்று தெரிகிறது.

மார்ச் முதல் அல்லது 2ஆவது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு?

நாடாளுமன்ற தேர்தல் மார்ச் முதல் அல்லது 2ஆவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தகவல்; தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக தேர்தல் ஆணையர்கள் மாநில வாரியாக சென்று இறுதி கட்டப் பணிகளை ஆய்வு செய்யத் திட்டம் மாநிலம் வாரியாக ஆய்வுகள் முடிவதற்கு மார்ச் முதல் வாரம் ஆகும் என்பதால் அதன் பிறகே தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்

குரூப் 4 தேர்வில் தேர்வானவர்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு

குரூப் 4 தேர்வில் அடங்கிய 3,373 தட்டச்சர் பதவிக்கான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் நவ.20 முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கலந்தாய்வில் காலியாக VAO உள்ளிட்ட 47 பதவிகள் இதில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.