நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 5-வது முறை​யாக நிரம்​பியது. நீர் வரத்து அதி​க​மாக இருப்​ப​தால், அணை​யில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரி​யாக வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபா​யம் எச்​சரிக்கை தொடர்கிறது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணையின் 16 கண் மதகுகள் வழியாக, வெள்ள நீர் காவிரியில் பெருக்கெடுத்து வருகிறது

சிறுவாணியில் அணை கட்ட அனுமதி கோரி கேரளா அரசு அளித்த விண்ணப்பத்தை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது

சிறுவாணி ஆற்றில் அணை கட்ட அனுமதி கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்துக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. கேரள அரசின் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை அடுத்து விண்ணப்பத்தை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருப்பி அனுப்பியது.

5 ஆண்டுகளுக்கு பிறகு, 2 லட்சம் கன அடியை தாண்டிய காவிரி நீர்வரத்து

2019ஆம் ஆண்டு 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து வந்த நிலையில், 5 ஆண்டுகள் கழித்து தற்போது 2 லட்சம் கன அடியை தாண்டியுள்ளது. திரும்பும் திசை எல்லாம் கடல் போல் காட்சி அளிக்கும் ஒகேனக்கல் கர்நாடக அணைகளில் 2.3 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், இன்று மாலைக்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு..

கேரளா: கனமழை காரணமாக பெருங்கல் குத்து அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

மணிமுத்தாறு அணை உடைந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் பரவும் தகவல் பொய்யானது. தூத்துக்குடி மக்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம்

மணிமுத்தாறு அணை உடைந்து விட்டதாகவும், அது திறந்து விடப்படுவதால் தாமிர பரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஒரு ஆடியோ வாட்ஸ்அப் குரூப்பில் பரவி பதட்டத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக தூத்துக்குடி கேம்பலாபாத் மக்கள் விசாரணையில் இறங்கியபோது அது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக மணிமுத்தாறு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பேசிய ஆடியோ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே தூத்துக்குடி மக்கள் பதட்டப்பட வேண்டாம்.

செம்பரம்பாக்கம் ஏரி : ‘உபரி நீர் திறப்பு அதிகரிப்பு’ – பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 25 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் (28.11.2023) காலை 10 மணி முதல் 200 கன அடியாக உபரிநீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று (29.11.2023) காலை 9 மணி முதல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி நீர் எனவும், அதன் பிறகு 2500 கன அடி நீர் எனவும் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் […]

முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் விவகாரத்திற்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த உத்தரவு

மூன்று மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் ஆணை முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மைய விவகாரத்துக்கு தீர்வுகாண கூட்டு சர்வே – தமிழ்நாடு-கேரள மாநில அரசுகள் இசைவு

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11,720 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11,720 கனஅடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் உபரிநீர் திறப்பு நேற்று 11,574 கனஅடியாக இருந்த நிலையில் உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,720 கனஅடியாக அதிகரித்துள்ளது.