மிக்ஜாம் புயல், மீட்புப் பணிக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக அறிவிப்பு..!!
‘சென்னைக்கு அடுத்த புயலா? வதந்திகளை நம்பாதீர்கள்’
சென்னையை நோக்கி அடுத்த வாரம் புதிய புயல் உருவாகியுள்ளதாக உலா வரும் வதந்தி அடிப்படையற்றது. அதுபோன்ற தகவல்களை நம்ம வேண்டாம் அரபிக் கடல் பகுதியில் காற்றத்தழுத்த தாழ்வுநிலை 10ம் தேதி உருவாகி இந்திய கடற்பகுதியை நோக்கி வரலாம். ஆனால், அதனால் சென்னைக்கு பாதிப்பு ஒன்றுமில்லை – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
சென்னை பட்டினப்பாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தில் 3 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் அலுவலகத்தில் சூழ்ந்ததால் பதற்றம்.
மின்சார சப்ளை கொடுக்கபோலிஸ் பாதுகாப்புடன் செல்லும் மின்சார ஊழியர்கள்.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புயல் வெள்ளம் பாதிப்பு கடுமையாக உள்ளது.குறிப்பாக முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகளை அடக்கிய மேற்கு தாம்பரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டபோது முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் தேங்கி இருப்பதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதி ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் தான் மூழ்கி தவிக்கிறது. காரணம் இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]
சூறைக்காற்றில் தூக்கி வீசப்பட்ட தடுப்புகள். இடம் சென்னை சென்ரல் அருகே.
அடுப்பு மற்றும் சமையலுக்கு தேவையானபொருட்களை பாதுகாப்பாக எடுத்து செல்லும்பெண். இடம் & வியாசர்பாடி
பாதுகாப்பான இடத்துக்கு புலம் பெயரும் பொதுமக்கள்
சென்னை அண்ணா சாலையை சூழ்ந்த வெள்ளம்
சென்னையில் வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வரலாறு காணாத வெள்ளத்தை சந்தத்தபோதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது பாதிப்பு குறைவாக உள்ளது. ▪️ 2015ம் ஒப்பிடும்போது தற்போது ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு அதிகம். ▪️ சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ▪️ 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்புகளும் […]